இன்று டெல்லியில் துவங்கிய ஜி20 உச்சிமாநாட்டின் முதல் நாளின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜி20 நாடுகளை மாற்று எரிபொருள் பயன்பாட்டுக்குள் வரவேண்டுமென அழைத்தார். ஏற்கனவே இந்தியா எத்தனால், பயோகேஸ், ஹைட்ரஜன் எரிவாயு பயன்படுத்துவதை துவங்கியும், அதற்காக கொள்கை அளவில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியை தொடங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார் மற்றும் மற்ற உலகத் தலைவர்களை இந்த முயற்சியில் சேர அழைப்பு விடுத்தார். உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி அதாவது Global Biofuel Alliance உருவாக்க உள்ளதாகவும், இதில் மற்ற நாடுகளையும் அழைப்பதாகவும் தெரிவித்தார்.

உலகளாவிய பயோஎரிபொருள் கூட்டணியை அமைப்பதற்கான இந்தியாவின் எனர்ஜி மாற்றத்தை விரைவுபடுத்தும் திட்டத்தை முன்வைத்து மாற்று எரிபொருள் நோக்கிய பயணம் இது வேகப்படுத்த உதவும் என அறிவித்தார்.
இந்த வருடத்திற்கான G20 தலைமை பொறுப்பை பெற்றுள்ள இந்தியா தான் உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக உள்ளது. எரிபொருள் இறக்குமதிக்கே அதிகப்படியான நிதியை இந்தியா செலவிடும் வேளையில் தான் மாற்று எரிபொருளுக்கான தேவையும், அவசியமும் உருவாகியுள்ளது.
உலக உயிரி எரிபொருள் கூட்டணி என்பது 2015 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாரிஸ் தலைமையில் உருவாக்கி இயக்கப்பட்டு வரும் சர்வதேச சோலார் கூட்டணியை (ISA) போன்றது. இந்த கூட்டணி மூலம் மாற்று எரிபொருளுக்கான தேடல் மற்றும் பயன்பாடு வேகப்படுத்துவது மட்டும் அல்லாமல் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் பரிமாற்றம் இதன் மூலம் எளிதாகும்.
இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி பிடிஐக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், 20 முக்கிய பொருளாதாரங்களின் குழுவின் உறுப்பினர்களிடையே பயோபியூயல் எரிபொருளுக்கான உலகளாவிய கூட்டணிக்கான இந்தியாவின் திட்டம் இருக்கும் என தெரிவித்தார்.

பயோபியூயல் என்பது பயோமாஸ்-ல் இருந்து பெறப்படும் ஒரு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும். இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்திற்கும் அதிகமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில் பயிர்கள், தாவரக் கழிவுகள் மற்றும் நகராட்சி திடக்கழிவுகள் உள்ளிட்ட பொருட்களிலிருந்து எரிபொருளை உற்பத்தி செய்யும் திறனை படிப்படியாக வளர்த்து வருகிறது இந்தியா.
இதேபோல் கரும்பு மற்றும் விவசாயக் கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் எத்தனால்-ஐ 2025 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலுடன் 20 சதவீதமாகக் கலக்க இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கம்பிரஸ்ட் பியோகேஸ் (CBG) ஆலைகள் அமைக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications