மோடியின் கனவு நினைவாகுமா..? இந்தியாவுக்கு ரூ.66400 கோடி கொண்டுவரும் இஸ்ரேல் நிறுவனம்..!

இந்தியாவில் பொருளாதாரம் உற்பத்தித் துறையைச் சார்ந்து ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில், மத்திய அரசு இந்தியாவைச் சீனாவுக்கு இணையான ஒரு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பக்கி ஹப் ஆக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நிலையில் இதற்கான அடித்தளத்தை மிகவும் வலிமையாக அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதியில் பெரும் பகுதி எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பங்கு வகிக்கும் வேளையில், இதன் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பை மத்திய அரசு பெரும் உதவித்தொகையுடன் ஊக்குவித்து வருகிறது. இதைப் பெரும் போட்டியில் தற்போது இஸ்ரேல் நிறுவனம் வந்துள்ளது.

மோடியின் கனவு நினைவாகுமா..? இந்தியாவுக்கு ரூ.66400 கோடி கொண்டுவரும் இஸ்ரேல் நிறுவனம்..!

இஸ்ரேல் நாட்டின் டவர் செமிகண்டக்டர் சுமார் 8 பில்லியன் டாலர், அதாவது ரூ.66400 கோடி முதலீட்டில் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் தொழிற்சாலையை இந்தியாவில் அமைப்பதற்கான திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானது.

டவர் செமிகண்டக்டர் நிறுவனம் இந்தியாவில் அமைக்கும் இந்த மெகா திட்டத்திற்கு மத்திய அரசின் சலுகை கோரி அரசிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளது. மத்திய அரசு இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் சிப் உற்பத்தியில் இந்தியா பிளளையார் சுழியைப் போடும்.

தற்போது வெளியாகியுள்ள தகவல் படி டவர் செமிகண்டக்டர் நிறுவனம் இந்தியாவில் 65 நானோமீட்டர் மற்றும் 40 நானோமீட்டர் சிப்-களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாகத் தெரிகிறது. சர்வதேச அளவில் இன்னும் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வேளையில் இஸ்ரேல் நாட்டின் டவர் செமிகண்டக்டர் இந்தியாவுக்குக் கொண்டு வருவது சற்று பழைய தொழில்நுட்பம் தான்.

இஸ்ரேல் நாட்டின் டவர் செமிகண்டக்டர் நிறுவனத்தைத் தான், சிப் தயாரிப்பில் ஜாம்பவானான அமெரிக்காவின் இன்டெல் கார்ப்ரேஷன் ஒப்பந்தம் செய்தது. ஆனால் பல காரணங்களை முன்வைத்து இன்டெல் தனது முடிவில் இருந்து பின்வாங்கியது. இதனால் இஸ்ரேல் டவர் செமிகண்டக்டர், இன்டெல் நிறுவனத்திடம் இருந்து சுமார் 353 மில்லியன் டாலர் தொகை ரத்துக் கட்டணமாகப் பெற்றது.

டவர் செமிகண்டக்டர் நிறுவனத்தின் முதலீடு, அதன் திட்டம் குறித்த இந்நிறுவனமும், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது முக்கியமான விஷயம். இதற்கு முன்பே டவர் செமிகண்டக்டர் பெங்களூரில் OSAT தொழிற்சாலைக்கான திட்டத்தை முன்வைத்துக் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு என்பது மோடி தலைமையிலான அரசின் முக்கியமான இலக்காகவே உள்ளது. இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கும் திட்டத்திற்காக மத்திய அரசு சுமார் 10 பில்லியன் டாலர் ஊக்கத் தொகையை அறிவித்துள்ளது.

இந்த ஊக்கத்தொகையைப் பெற பல நிறுவனங்கள் முன் வந்தாலும் ஆரம்பக் கட்டத்திலேயே தோல்வியடைகின்றன, சில திட்டங்கள் அடுத்தக்கட்டத்திறகு நகர முடியாமல் ஸ்தம்பித்தன அல்லது ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் தான் இஸ்ரேல் நாட்டின் டவர் செமிகண்டக்டர் வந்துள்ளது.

சமீபத்தில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான ஹெச்சிஎல் குரூப் மற்றும் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த மாபெரும் கூட்டணி இந்தியாவில் புதிய செமிகண்டக்டர் OSAT தொழிற்சாலையை அமைக்க உள்ளது, OSAT என்பது செமிகண்டக்டர் சிப்-ஐ அசம்பிளி மற்றும் டெஸ்டிங் சேவைகளை அளிக்கும் நிறுவனமாகும்.

ஹெச்சிஎல் நிறுவனம் மற்றும் தைவான் பாக்ஸ்கான் கூட்டணியில் உருவாகும் சிறப்பு நிறுவனத்தில் 40 சதவீத பங்குகளைப் பாக்ஸ்கான் நிறுவனமும், 60 சதவீத பங்குகளை ஹெச்சிஎல் கொண்டு சுமார் 37.2 மில்லியன் டாலர் அதாவது 310 கோடி ரூபாய் முதலீடு செய்து இந்த OSAT தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+