பிரதமர் நரேந்திர மோடி பல முறை அமெரிக்கா சென்று ஜோ பைடன் முதல் பல அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களை நேரில் சந்தித்திருந்தாலும், தற்போது முதல் முறையாக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடியின் இந்த பயணம் இந்தியா - அமெரிக்கா மத்தியிலான உறவில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
Recommended Video
நரேந்திர மோடி இந்த பயணத்தில் நியூயார்க், வாஷிங்டன் ஆகிய இரு நகரங்களுக்கு செல்வது மட்டும் அல்லாமல் அரசு முறை டின்னர்-ஐயும் ஏற்க உள்ளார். இந்த பயணத்தின் மூலம் அமெரிக்கா - இந்தியா மத்தியிலான பாதுகாப்பு துறை சார்ந்த உறவு அடுத்தக்கட்டத்திற்கு செல்ல உள்ளதாகவும், அடுத்த சில வருடங்களுக்கு இரு நாடுகள் மத்தியில் பாதுகாப்பு துறை பகிர்மானம் நடக்க உள்ளது.

ஜனவரி மாதம் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு மத்தியில் initiative on critical and emerging technology (iCET) கீழ் இரு நாடுகளும் செயற்கை நுண்ணறிவு, குவான்டம் கம்பியூட்டிங், வான்வெளி பயணம், செமிகண்டக்டர், பாதுகாப்பு துறை தொழில்நுட்பம் ஆகியவற்றின் கீழ் இணைந்து செயல்பட ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து மார்ச் மாதம் அமெரிக்க வர்த்தக துறை செயலாளர் Gina Raimondo இந்தியாவுடன் செமிகண்டக்டர் சப்ளை செயின் பிரிவில் இரு தரப்பு கூட்டணி ஒப்பந்தத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சரான பியூஷ் கோயல் உடன் கையெழுத்திடப்பட்டது.
இதேபோல் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் Lloyd Austin சமீபத்தில் இந்தியா வந்த போது அமெரிக்கா - இந்தியா மத்தியிலான பாதுகாப்பு துறையில் இணைந்து செயல்படவும், பல்வேறு தொழில்நுட்பத்தை பகிரவும் INDUS-X ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோடி இந்த பயணத்தின் மூலம் இரு புதிய ஒப்பந்தங்களும் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல உள்ளது. அமெரிக்கா தரப்பில் இருந்து GE F414 jet engines-களின் கூட்டு உற்பத்தி ஒப்பந்தம் மற்றும் MQ9 sea guardian drones பகிர்வுக்கான ஒப்பந்தம் மோடியின் இந்த பயணத்தில் உறுதியாக உள்ளது.
இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்-ல் செமிகண்டக்டர் அசம்பிளி பேகேஜ் மற்றும் டெஸ்டிங் தளத்தை அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வார துவக்கத்தில் அமெரிக்காவின் பிரபலமான செமிகண்டக்டர் நிறுவனமான மைக்ரான் இந்தியாவில் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான 4 அசம்பிளி லைன் கொண்ட செமிகண்டக்டர் சிப் அசம்பிளி மற்றும் டெஸ்டிங் தளத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியானது.
Micron நிறுவனம் முதல் கட்டமாக 2.5 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்ய உள்ளதாகவும், மீதுமுள்ள முதலீட்டை அடுத்த 5 வருடத்தில் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாக வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications