பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் நாட்டில் ஜூலை 14 ஆம் தேதி நடக்க உள்ள பாஸ்டில் தின கொண்டாட்டத்தில் கெளரவ விருந்தினராக பங்கேற்று, அதிபர் இம்மானுவேல் மக்ரான் மற்றும் பிற தலைவர்களை சந்திக்க உள்ளார். இந்தியா - பிரான்ஸ் நாடுகளின் 25 ஆண்டு கால நடப்பை வெளிப்படுத்தும் வகையில் சுமார் 90000 கோடி ரூபாய் மதிப்பிலான போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்திய பாதுகாப்புத் துறைக்காக வாங்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் சுற்றுப் பயணத்தில் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகத்தை மேம்படுத்தும் வரையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரான் உடன் இந்திய - பிரான்ஸ் சிஇஓ-கள் உடன் பிரதமர் மோடி முக்கிய கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்தியா - பிரான்ஸ் வர்த்தக தொடர்பு எப்படிப்பட்டது..? இந்தியாவில் பிரான்ஸ் நாட்டின் நிறுவனங்கள் எத்தனை உள்ளது..?

பிரான்ஸ் நாட்டின் முன்னணி வர்த்தக குழுமங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் உள்ளது, இதோடு பல்வேறு கூட்டணி நிறுவனங்களும், பிரான்ஸ் கிளைகளும் உள்ளது. பிரான்ஸ் நாட்டின் முக்கிய பங்குச்சந்தை குறியீடான CAC40 கீழ் இருக்கும் 40 நிறுவனங்களில் சுமார் 39 நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளது.
இதைத் தாண்டி 50 முதல் 70 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களும் இந்தியாவில் உள்ளது, இதில் பெரும்பாலும் மெக்கானிக்கல், பார்மா - கெமிக்கல் துறை சார்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் இருக்கும் பிரான்ஸ் எம்பசி தரவுகள் படி பிரான்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் 300000 பேருக்கு வேலைவாய்ப்பையும், 20 பில்லியன் டாலர் டர்ன்ஓவர், 19 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்கு முதலீடு போர்ட்போலியோவை கொண்டு உள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே உள்ள 1000 க்கும் மேற்பட்ட பிரான்ஸ் நிறுவனங்கள் மூலம் இந்தியாவின் அன்னிய முதலீட்டின் முக்கிய ஆதாரமாக பிரான்ஸ் உள்ளது. ஏப்ரல் 2000 முதல் டிசம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் பிரான்ஸ் இந்தியாவில் சுமார் 10.49 பில்லியன் டாலர் அளவிலான முதலீடு செய்துள்ளது.
இது இந்தியா பெறப்பட்ட மொத்த அன்னிய முதலீட்டில் 1.68 சதவீதமாக உள்ளது என மத்திய DPIIT துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் முதலீடு செய்யப்பட்ட முக்கிய நாடுகள் பட்டியலில் 11வது பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக உள்ளது பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டின் அதிகப்படியான அன்னிய நேரடி முதலீடுகள் சேவைத் துறையில் குவிந்துள்ளது, பிரான்ஸ் நாட்டின் 10.49 பில்லியன் டாலர் முதலீட்டில் சுமார் 18.05% சேவைத் துறையில் குவிந்துள்ளது. இதை தொடர்ந்து சிமெண்ட் மற்றும் ஜிப்சம் பொருட்கள் பிரிவில் 9.29% முதலீட்டைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
சேவை துறை மற்றும் சிமெண்ட் துறையை தொடர்ந்து விமானப் போக்குவரத்துத் துறையில் 7.59%, இதர தொழில்கள் 7.24%, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு 7.10% முதலீட்டைப் பெற்றுள்ளது. அதானி குழுமத்தில் பிரான்ஸ் நாட்டின் டோட்டல் எனர்ஜிஸ் பெரிய அளவிலான முதலீட்டைச் செய்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் முக்கிய பிரான்ஸ் நிறுவனங்கள் பட்டியல்:
சேவை துறை - பிஎன்பி பரிபாஸ், கேப்ஜெமனி, ஹாவஸ், Sodexo
பார்மா துறை - Arkema, L'Oréal, சனோஃபி, டோட்டல் எனர்ஜிஸ்
ஏரோஸ்பேஸ் துறை - ஏர்பஸ், டசால்ட், ஈரோகாப்டர், சாப்ரான், தேலெஸ்
அக்ரோ - புட் துறை - Bongrain, Danone, Lactalis, Lesaffre, Pernod Ricard
எலக்ட்ரானிக்ஸ் துறை - எஸ்டிமைக்ரோஎலக்ட்ரானிக்ஸ், Crouzet, Oberthur, Safran, Thales
கட்டுமான மெகானிக்ஸ் துறை - அல்ஸ்டாம், Cermex, Legris Group, Poclain, Sidel
எலக்ட்ரிக்கல் பொருட்கள் துறை - Hager, Legrand, Schneider Electric
ஆட்டோமொபைல் துறை - Faurecia, Michelin, Plastic Omnium, Renault, Valeo


Click it and Unblock the Notifications