மத்திய அரசின் பிரதான் மந்திரி கிரிப் கல்யாண் யோஜனா (PMGKAY) என்னும் இலவச ரேஷன் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 4ஆம் தேதி அறிவித்தார். இந்த நீட்டிப்பு மூலம் சுமார் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் சத்தீஸ்கரில் நடைபெறும் தேர்தல் பேரணியில் பிரதமர் அறிவித்தார்.
கொரோனா காலத்தில் மக்கள் நலனுக்காக 2020 ஏப்ரல் முதல் ஆண்டுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் 80 கோடி இந்தியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசியை மோடி அரசு வழங்கி வருகிறது.

இந்தத் திட்டம் டிசம்பர் 31, 2023 உடன் முடிய வேண்டிய நிலையில் உணவுப் பொருட்கள் விலைவாசி உயர்வின் தாக்கத்தைச் சாமானிய மக்கள் மத்தியில் குறைக்கும் விதமாகவும், 5 மாநில தேர்தல் மற்றும் 2024ல் நடக்க உள்ள பொதுத் தேர்தல் ஆகியவற்றை முன்னிறுத்தி நரேந்திர மோடி இத்திட்டத்தை அடுத்த 5 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
பிரதான் மந்திரி கிரிப் கல்யாண் யோஜனா (PMGKAY) திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசுக்கு நடப்பு நிதியாண்டில் மட்டுமே கூடுதலாக 40000 கோடி ரூபாய்ச் செலவாகும் நிலை உருவாகியுள்ளது எனப் பொருளாதார வல்லனர் கணித்துள்ளனர். இதன் மூலம் மத்திய அரசின் 2024 ஆம் நிதியாண்டின் நிதி பற்றாக்குறை இலக்கான 5.9 சதவீதத்தை அடைவது மிகவும் கடினமாகும் என நோமூரா கணித்துள்ளது.
மத்திய அரசு உணவு மானிய திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டுக்கு மட்டுமே 1.97 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. ஏப்ரல் - செப்டம்பர் வரையில் 6 மாத காலகட்டத்திற்கு மட்டுமே 95000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. டிசம்பர் 31 உடன் முடிய வேண்டிய திட்டம் தற்போது அடுத்த 5 வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் கூடுதலாக 40000 கோடி ரூபாய்ச் செலவாகும் என நோமுரா கணித்துள்ளது.
மத்திய அரசு ஏற்கனவே விவசாய உரம் மானியம் சார்பாக 22000 ரூபாய் அளவிலான நிதிச் சுமையை எதிர்கொண்டு உள்ளது. இதேபோல் கிராமப்புறத்தில் மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களுக்கும் நிதி தேவை உள்ளது. இதனால் இந்த வருடம் உணவு மானிய திட்டத்திற்காகக் கூடுதலாக 40000 ரூபாய் வரையிலான நிதி தேவை வரலாம் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications