பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு முதல் முறையாக அரசு முறை பயணம் சென்றுள்ளார், இந்த பயணத்தில் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவருடைய மனைவியை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ஜோ பைடன் மற்றும் ஜில் பைடனுக்கு தனித்தனியாக கிப்ட் கொடுத்தார் மோடி.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த வருடம் நவம்பர் மாதம் 81 வயதாகும் நிலையில் தனியாக பிரதமர் மோடி பரிசாக வழங்கியுள்ளார்.

மோடி ஜோ பைடன்-க்கு சந்தனப் பெட்டியில் வெள்ளி விநாயகர் சிலை, வெள்ளி விளக்கு மற்றும் 80 வயதானதை உணர்த்தும் வகையில் 1000 பௌர்ணமி கண்டவர்களுக்கு அளிக்கப்படும் 'தாஸ் தானம்' ஆகியவை அடங்கிய பெட்டியை பரிசாக கொடுத்தார்.
இது மட்டும் அல்லாமல் 10 முக்கிய உபநிடதங்கள் குறித்த The Ten Principal Upanishads புத்தகத்தின் முதல் பதிப்பின் பிரதியை ஜோ பிடனுக்கு பிரதமர் பரிசாக வழங்கினார்.
இதேபோல் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் வின்டேஜ் கேமரா, அமெரிக்கன் வைல்ட்லைப் போட்டோகிராபி புத்தகத்தையும், ராப்ர்ட் பார்ஸ்ட்-ன் கவிதைகள் அடங்கிய முதல் பதிப்பு புத்தகத்தில் அவருடைய கையெழுத்துடன் பரிசாக வழங்கினார்.
நியூயார்க்-ல் பயணத்தில் பல நிறுவனங்களின் சிஇஓ-க்கள், தலைவர்கள், கல்வியாளர்கள் என பலரை செவ்வாய்க்கிழமை சந்தித்த நிலையில், நேற்று யோகாவில் உலகளாவிய சாதனை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பின்பு வாஷிங்டன் புறப்பட்டார்.

பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு முதல் முறையாக அரசு முறை பயணம் சென்றுள்ளதால், இப்பயணம் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. மோடியின் அரசு பயணம் என்பதால் அமெரிக்க அதிபர் மற்றும் அவருடைய மனைவி ஜில் பைடன் வெள்ளை மாளிகைக்கு முறையாக அழைத்து வியாழக்கிழமை இரவு விருந்து அளித்தனர் உள்ளது. இதற்காக வெள்ளை மாளிகையில் மயில், தாமரை என பல சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இந்த இரவு விருந்திற்காக பிரதமர் மோடியின் சைவ உணவு பழக்கத்தை தெரிந்துக்கொண்டு அவருக்கு படித்தமான உணவுகள் தயார் செய்து வழங்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications