பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு முதல் முறையாக அரசு முறை பயணம் சென்றுள்ளதால், இப்பயணம் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இந்த பயணத்தில் பல முக்கிய ஒப்பந்தங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், பாதுக்காப்பு துறை சார்ந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
மோடியின் அரசு பயணம் என்பதால் அமெரிக்க அதிபர் மற்றும் அவருடைய மனைவி ஜில் பைடன் அவரை வெள்ளை மாளிகைக்கு முறையாக அழைத்து இரவு விருந்து அளித்தனர். இதற்காக வெள்ளை மாளிகையில் மயில், தாமரை என பல சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க முதல் பெண்மணி டாக்டர் ஜில் பைடன்-ஐ சந்தித்த பிரதமர் மோடி உலகநாடுகள் வியக்கும் வகையில் பெரிய அளவிலான உற்பத்தியில் இறங்கப்பட்டு உள்ள Lab-ல் உருவாக்கப்பட்ட வைரத்தின் மகிமையை உணர்த்தும் வகையில் பரிசு அளித்தார் பிரதமர் மோடி.
இந்தியா ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 7.5 கேரட் பசுமை வைரத்தை பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க முதல் பெண்மணி டாக்டர் ஜில் பைடனுக்கு பரிசளித்தார். அது ஏன் பசுமை வைரம்.
இந்த வைரம் பூமியில் இருந்து வெட்டப்பட்ட வைரங்களின் இரசாயன மற்றும் ஒளியியல் பண்புகளை அப்படியே பிரதிபலிக்கிறது, ஆனால் இது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரம். மேலும் இந்த 7.5 கேரட் வைரத்தை உருவாக்க சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற கிரீன் எனர்ஜி பயன்படுத்தப்பட்டதால், இது பசுமை வைரம் என அழைக்கப்படுகிறது.
மேலும் இந்த வைரத்தை மோடி வெறுமென கொடுக்கவில்லை Papier mâché என சிறப்பு மிக்க பெட்டியில் 7.5 கேரட் வைரம் வைக்கப்பட்டு அளிக்கப்பட்டு உள்ளது. கர்-இ-கலாம்தானி என்று அழைக்கப்படும், காஷ்மீரின் நேர்த்தியான பேப்பியர் மச்சே பெட்டி காகிதக் கூழ் மற்றும் நக்காஷி கலையை உள்ளடக்கி செய்யப்பட்டு உள்ள சிறப்பு மிக்க பெட்டி.
பிரதமர் மோடி கஷ்மீர்-ன் பாரம்பரியமான Papier mâché என சிறப்பு மிக்க பெட்டி மூலம் இந்தியாவின் கலாச்சாரத்தையும், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 7.5 கேரட் கொண்ட பெரிய வைரத்தையும் கொடுத்து நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் கிப்ட் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications