சென்னை: இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகரிப்பதற்காக மத்திய அரசு கொண்டு வந்த புதிய எலக்ட்ரிக் வாகன திட்டத்தில் (Electric Vehicle - EV Policy) மாற்றம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லா (Tesla) புதிய கொள்கையை கொண்டு வந்த பின்பு இதுவரை இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பது குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை என்பதால் மத்திய அரசு இக்கொள்கையின் கட்டுப்பாடுகளை மாற்ற முடிவு செய்திருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

மத்திய அரசு தேர்தலுக்கு முன்பு அவசர அவசரமாக புதிய EV கொள்கையை வெளியிட்டது. மத்திய அரசு அறிவித்த புதிய EV கொள்கையின் மூலம் உயர் தர அல்லது உயர் வகை எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை இந்தியாவில் ஊக்குவிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம், தற்போது புதிய முதலீடுகளுக்கு மட்டுமே ஆதரவு அளிக்கும் விதமாக உள்ளது.
அதாவது டெஸ்லா, BYD போன்ற முன்னணி எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களை ஈர்க்கும் திட்டத்துடன் தான் இக்கொள்கை வெளியிடப்பட்டது. ஆனால் டெஸ்லாவின் மோசமான காலாண்டு முடிவுகள் காரணமாக இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தைக் கைவிடப்பட்டது. BYD சீன நிறுவனம் என்பதால் இந்தியாவில் முதலீடு செய்ய வாய்ப்பு இல்லை, இதனால் இக்கொள்கையின் கீழ் எந்தொரு புதிய நிறுவனமும் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க விருப்பம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் புதிய EV கொள்கையை அனைத்து தரப்பு நிறுவனங்களுக்கும் ஏதுவாக மாற்றும் இலக்குடன் இந்த திட்டத்தில் மாற்றங்களைச் செய்வதற்கான ஆலோசனைகள் மத்திய அரசு பல்வேறு தரப்பினருடன் நடைபெற்று வருகின்றன. தற்போது உள்ள முதலீடுகளையும் இந்த திட்டத்தில் சேர்க்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை உற்பத்தி செய்யும் ஆலைகளுடன் இணைந்து எலக்ட்ரிக் வாகனங்களையும் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கும் இந்த திட்டத்தில் சலுகைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உற்பத்தி அளவை அதிகரித்து பெரிய முதலீடுகளை லாபகரமாக செய்ய வாகன உற்பத்தியாளர்களுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் புதிய EV கொள்கையில் (SMEC - Scheme for Manufacturing of Electric Cars) ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா, ஹூண்டாய், கியா, வின்ஃபாஸ்ட் போன்ற சுமார் ஆறு வாகன உற்பத்தியாளர்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிகிறது. இவை அனைத்தும் இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களாகும், இந்த மாற்றம் வந்தால் வின்பாஸ்ட் எதிர்பார்த்து வந்த சலுகை கிடைக்கும்.
வாகன உற்பத்தியாளர்களின் கோரிக்கை: புதிய எலக்ட்ரிக் வாகன திட்டத்தில் தற்போதுள்ள முதலீடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுடன் இணைந்து எலக்ட்ரிக் வாகனங்களையும் உற்பத்தி செய்யும் ஆலைகளையும் சேர்க்க வேண்டும் என்றும் வாகன உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதை அடிப்படையாக வைத்து தான் தற்போது மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.
தற்போது இந்திய பயணிகள் வாகன சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களின் பங்கு மிகக் குறைவாக உள்ளது. இதன் காரணமாக எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்காக பெரிய அளவிலான முதலீடுகளை செய்வது லாபகரமாக இருக்காது என்று வாகன உற்பத்தியாளர்கள் கருதுகின்றனர். இந்த புதிய EV கொள்கை மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை எந்த வாகன உற்பத்தியாளரும் அதிகாரப்பூர்வமாக புதிய முதலீடு செய்ய உள்ளோம் என்று அறிவிக்கவில்லை.
புதிய எல்கட்ரிக் வாகன கொள்கை: இந்த புதிய எல்கட்ரிக் வாகன திட்டத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்யும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் மாபெரும் PLI திட்டத்தின் சலுகையுடனும், அதனுடைய இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் கார்களுக்கு பெரும் வரி சலுகையும் அளிக்க மத்திய அரசு மார்ச் 15 ஆம் தேதி இந்த புதிய கொள்கை மூலம் அறிவித்துள்ளது.
இப்புதிய கொள்கை கீழ் சலுகை பெற முதலில் குறைந்தபட்ச தொகையாக ரூ.4,150 கோடி அல்லது 500 மில்லியன் டாலர் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்து தொழிற்சாலையை 3 வருடத்திற்குள் கட்டி முடித்து உற்பத்தியைத் துவங்க வேண்டும். அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை.
இத்திட்டத்தின் விதிகளை ஏற்று முதலீடு செய்யும் வெளிநாட்டு எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்குக் குறைந்தது 35,000 டாலர் சி.ஐ.எஃப் மதிப்புள்ள ஒரு எலக்ட்ரிக் கார்களுக்கு ( சி.ஐ.எஃப் என்பது கப்பல் போக்குவரத்து செலவு, காப்பீடு, சரக்குக் கட்டணம் சேர்க்கப்பட்ட தொகை), CKD வடிவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு விதிக்கப்படும் அதே 15% சுங்க வரி 5 ஆண்டுகளுக்கு விதிக்கப்படும் என்பது தான் முக்கியமான சலுகை.
இத்திட்டத்தின் விதிகளை ஏற்று முதலீடு செய்யும் வெளிநாட்டு எலக்ட்ரிக் வாகன நிறுவனங்களுக்குக் கிடைக்கப்போகும் ஜாக்பாட் சலுகை இதுதான்.
குறைந்தது 35,000 டாலர் சி.ஐ.எஃப் மதிப்புள்ள ஒரு எலக்ட்ரிக் கார்களுக்கு ( சி.ஐ.எஃப் என்பது கப்பல் போக்குவரத்து செலவு, காப்பீடு, சரக்குக் கட்டணம் சேர்க்கப்பட்ட தொகை), CKD வடிவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு விதிக்கப்படும் அதே 15% சுங்க வரி 5 ஆண்டுகளுக்கு விதிக்கப்படும்.


Click it and Unblock the Notifications