இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் டெக்ஸ்டைல் ஏற்றுமதியில் ஆதிக்கம் செலுத்தும் திருப்பூர்-க்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு மூலம் பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய டெக்ஸ்டைல் ஏற்றுமதி ஹப் ஆக இருக்கும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி 2024-25 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் 1.5 சதவிகிதம் என்ற சிறிய அளவிலான வளர்ச்சி உடன் தொடங்கிய ஏற்றுமதி, மே மற்றும் ஜூன் மாதங்களில் முறையே 11.4 சதவிகிதம் மற்றும் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.
இந்த நிலையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை கொடுத்த பேட்டியில் நாடு முழுவதும் 12 புதிய தொழில் பூங்காக்களை மத்திய அரசு அமைத்து வருவதாகவும், 5 முதல் 6 மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் அரசின் இந்த முயற்சிகளைத் தனியார் துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த 5-6 மெகா டெக்ஸ்டைல் பூங்காவில் தமிழ்நாட்டில் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது தெரியவில்லை, ஆனாலும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் டெக்ஸ்டைல் துறையில் திருப்பூர், கோயம்புத்தூர் தாண்டி ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களும் கணிசமான பங்கு வகிக்கிறது என்பதால் இந்த மெகா ஜவுளிப் பூங்கா திருப்பூர் தாண்டி மாநிலத்தின் பிற பகுதிகளில் அமைந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தில் எதிர்கொள்ளும் கொள்கைகள் மற்றும் இணக்க ரீதியான பிரச்சினைகளைக் கண்டறிய அரசுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். இதன் வாயிலாக வர்த்தக துறையில் இருக்கும் அடிப்படை பிரச்சனைகளை களைவது மூலம் பல கடுமையான சட்டங்கள் வர்த்தகத்தைப் பாதிப்பதைத் தடுக்க முடியும் என தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் அரசின் சாதனைகளைக் குறிப்பிட்ட அவர், இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தொழிற்துறையினரும், மக்களும் ஆதரிப்பதாகக் கூறிய அவர், "நாட்டின் ஜிடிபி இரட்டிப்பாகியுள்ளது, அந்நியச் செலாவணி கையிருப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது, நடப்புக் கணக்குப் பற்றாக்குறை கணிசமாகக் குறைந்துள்ளது, ஒரு நல்ல அரசாங்கம் எப்படி பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதைக் காட்டுகிறது" என்று அவர் கூறினார்.
இதன் வாயிலாக உலக நாடுகள் இந்தியாவுடன் ஃப்ரீ டிரேட் வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்து வர்த்தக உறவை விரிவுபடுத்த விரும்புவதாக பியூஷ் கோயல் தெரிவித்தார். 2047 ஆம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதாரம் 35 டிரில்லியன் டாலராக இருக்கும் என்றும் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications