பொருளாதார சரிவில் இருந்த அர்ஜென்டினா தற்போது அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறது. பல ஆண்டுகளாக பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்த அர்ஜென்டினா முதன்முறையாக பற்றாக்குறையே இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இதனை குறிப்பிட்டு ஸோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தேவையற்ற அரசாங்க செலவினங்களை குறைப்பதற்காக அர்ஜென்டினா அதிபர் எடுத்த முயற்சிகளை ஸ்ரீதர் வேம்பு பாராட்டியுள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தியை பற்றிய நமது கருத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உண்டாகி இருக்கிறது குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜென்டினா அதிபர் மிலே தேவையற்ற அரசாங்க செலவினங்களை குறைக்க தொடங்கிய போது பாரம்பரிய கீனிசிய பொருளாதார வல்லுநர்கள் இது நாட்டின் பொருளாதாரத்தையே அழித்துவிடும் எனக் கூறினர் , தொடக்கத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது. ஆனால் அது தற்போது மீண்டும் வளர்ந்து வருகிறது என கூறியுள்ளார்.
நூற்றாண்டிலேயே முதல்முறையாக அந்நாட்டு அரசு பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது என ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார். மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்பான நம்முடைய கருத்தினை மொத்தமாக நம் மாற்றிக் கொள்ள வேண்டும் என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அதிக அளவிலான அரசாங்க செலவினங்கள் நேரடியாக அறிவிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேர்க்கப்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிறுவனங்கள் வருவாயை காட்டிக் கொண்டே கடன் தொகையை அதிகரிப்பது போல அரசியல்வாதிகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை காட்டிக் கொண்டே அரசாங்க நிதிகளை திவால் நிலைக்கு கொண்டு சென்று விடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார். பாரம்பரியமாக நாம் பின்பற்றி வரும் கீனிசிய பொருளாதார கோட்பாடு அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளுக்கு தான் மரியாதை அளிக்கிறது அதனை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஸ்ரீதர் யோசனை கூறியுள்ளார்.
ஆடம்பரமான கல்வி சான்றுகளுடன் இருக்கும் பொருளாதார நிபுணர்களுக்கு நாம் மரியாதை செலுத்தக் கூடாது என குறிப்பிட்டுள்ள அவர் இந்த நவீன காலத்தில் அர்ஜென்டினாவை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், நான் அர்ஜென்டினாவின் பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிகப்படியான அரசாங்க செலவினங்கள் போதைக்கு அடிமையாவதற்கு சமம் என ஒப்பிட்டுள்ள அவர் அர்ஜென்டினாவின் பொருளாதாரம் பல தசாப்தங்களாக அதிகப்படியான செலவு, பணவீக்கம் மற்றும் தவறான நிர்வாகம் ஆகியவற்றால் நலிவுற்று போனது. இந்த நிலையில் தான் அர்ஜென்டினா மக்கள் அதிபர் மிலிக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தனர் அவர் அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
உலகெங்கிலும் பொருளாதாரம் தொடர்பான புதிய சிந்தனை தற்போது தேவைப்படுகிறது என குறிப்பிட்டுள்ள ஸ்ரீதர் வேம்பு, கூடிய விரைவில் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் தேவையற்ற செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதையும் குறிப்பிட்டுள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications