பாஜக தலைமையிலான மத்திய அரசு, இந்திய ரயில்வே துறையை "திறமையற்றது" என்று நிரூபிக்க விரும்புவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டினார்.
ரயில்வே துறை லாபமற்றது, திறம்படச் செயல்படுத்த முடியாத ஒன்று என்று காட்டுவது மூலம் அதை தனது "நண்பர்களுக்கு" விற்க முயல்கிறது பாஜக அரசு. இதனால் சாமானியர்களின் போக்குவரத்தைக் காப்பாற்ற மோடி அரசை ஆட்சியில் இருந்து அகற்ற மக்களை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டார் ராகுல் காந்தி.

மேலும் பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்கள் கழிப்பறைகளிலும் ரயிலின் தரையிலும் அமர்ந்து பயணிக்கும் வீடியோவையும் ராகுல் காந்தி டிவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கிய வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இன்று மணிப்பூரில் 11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது.
2ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடக்கிறது. இந்த நாளில் அஸ்சாம், சட்டீஸ்கர், கர்நாடகா, மத்திய பிரதேசம், பீகார், ஜம்மு காஷ்மீர், கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ளது.
இந்த நிலையில் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் வேளையில், ராகுல் காந்தியின் பேச்சு பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ராகுல் காந்தி டிவிட்டரில் நரேந்திர மோடியின் ஆட்சியில் 'ரயில் பயணம்' தண்டனையாக மாறியுள்ளது. பொதுப் பெட்டிகளைக் குறைத்து 'எலைட் ரயில்களை' மட்டுமே ஊக்குவிக்கும் மோடி அரசால் ஒவ்வொரு வகைப் பயணிகளும் துன்புறுத்தப்படுகின்றனர்' என X இல் பதிவிட்டுள்ளார்.
உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளுடன் கூட மக்கள் தங்கள் இருக்கைகளில் நிம்மதியாக உட்கார முடியாத நிலையில் மக்கள் தவிப்பதாகவும் அவர் கூறினார். சாமானியர்கள் கழிவறையில் மறைந்தோ அல்லது தரையில் அமர்ந்தோ பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்றார் ராகுல் காந்தி.
"மோடி அரசாங்கம் ரயில்வே துறையை தனது கொள்கைகளால் பலவீனப்படுத்துவதன் மூலம் 'திறமையற்றது' என்பதை நிரூபிக்க விரும்புகிறது, இதனால் அதைத் தனது நண்பர்களுக்கு விற்க ஒரு காரணத்தை உருவாக்கி வருகிறது." என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
சாமானியர்களின் போக்குவரத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், ரயில்வே துறையை சீரழிக்கும் மோடி அரசை ஆட்சியில் அகற்ற வேண்டும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் கூறினார்.


Click it and Unblock the Notifications