இந்தியாவில் அனைவருக்கும் அனைத்து வங்கி சேவைகளும் கிடைக்க வேண்டும் அதன் மூலம் அதிகப்படியான வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க முடியும் என்பதைப் பெரிய அளவில் மத்திய அரசு நம்பும் நிலையில், மத்திய அரசு 3வது முறையாக மாபெரும் நிதி உள்ளடக்கத் திட்டத்தைத் தீட்டி வருகிறது.
மத்திய அரசின் ஜன் தன் யோஜனா பெரிய அளவிலான மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்தியது மறுக்க முடியாத உண்மை, ஆனால் இதன் மூலம் மக்களுக்குச் சில சுமையும் உருவானது மறுக்க முடியாது குறிப்பாக ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கு.
இந்நிலையில் மத்திய அரசு சில முக்கியமான திட்டத்துடன் ஜன் தன் 3.0 திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
5 மாநில தேர்தல்
5 மாநில தேர்தல் நடக்க உள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பில் துவங்கி, குளிர்காலக் கூட்டத்தொடரில் 26 மசோதா, பட்ஜெட் எனப் பல முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடக் காத்திருக்கிறது. இந்த நிலையில் மக்களுக்குக் கிடைக்கும் நிதியியல் சேவையைப் பெரிய அளவில் மேம்படுத்த ஜன் தன் 3.0 திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஜன் தன் 3.0 திட்டம்
ஜன் தன் 3.0 திட்டத்தில் டோர் ஸ்டெப் பேங்கிங், டிஜிட்டல் பைனான்சியல் திட்டங்கள், பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் திட்டத்தில் ஒன்றிணைப்பு எனப் பல முக்கியத் திட்டத்தை முக்கிய இலக்காகக் கொண்டு உள்ளது.
5 கிலோமீட்டர் தூரம்
அனைத்திற்கும் மேலாக நாடு முழுவதும் 5 கிலோமீட்டர் தொலைவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கு வங்கி அல்லது நிதியியல் சேவை கிடைக்கும் தளத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும்
ஜன் தன் 3.0 திட்டம் குறித்து அரசு அதிகாரி கூறுகையில் வங்கிகளுடன் இணைந்து டிஜிட்டல் கடன் விண்ணப்பங்கள், ரீடைல், MSME, விவசாயக் கடன்களை எளிதாகப் பெறக் கட்டமைப்பை உருவாக்குவதிலும் ஈடுபட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஜன் தன் வங்கி கணக்கு
மேலும் வங்கிகளை மத்திய அரசு ஜன் தன் வங்கி கணக்குகளுடன் அடல் பென்ஷன் யோஜனா, பிரதமர் ஸ்வாநிதி, ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா ஆகிய திட்ட இணைப்பு குறித்தும் ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளது.
அதிகப்படியான சலுகை
அதாவது ஜன் தன் யோஜனா வங்கி கணக்கு, ஆதார் மற்றும் மொபைல் கட்டமைப்பு மூலம் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான சலுகையும், கவரேஜ் திட்டத்தையும் அளிக்க முடியும் என அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் மக்களுக்கு மட்டும் அல்லாமல் வங்கிகளுக்கும் அதிகப்படியான வர்த்தகம் கிடைக்கும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications