மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கிழ் இந்தியா பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா 2013 ஆம் ஆண்டில் இருந்ததை விட தற்போது வித்தியாசமாக உள்ளது.
வெறும் 10 ஆண்டுகளில் மேக்ரோ எக்னாமி மற்றும் சந்தைக் கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி உடன் முன்னணி பொருளாதார நாடுகள் மத்தியில் இந்தியா முக்கிய இடத்தை பெற்றுள்ளது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

மோடி தலைமையிலான அரசின் கொள்கைத் தேர்வுகள் மூலம் 2014 முதல் இந்தியா எவ்வாறு வளர்ச்சியும் மாற்றங்களையும் சந்தித்துள்ளது என்பதை மார்கன் ஸ்டான்லி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மோடி அரசு செய்த 10 பெரிய மாற்றங்களை இந்திய அரசின் கொள்கை மாற்றங்கள் வாயிலாக சாதிக்க முடிந்தது என தெரிவித்துள்ளது.
கடந்த 9 வருடத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்த 10 பெரிய மாற்றங்களை மோர்கன் ஸ்டான்லி பட்டியலிட்டு உள்ளது.
1. சப்ளை பிரிவில் கொள்கை மாற்றம்
2. பொருளாதாரத்தை சீராக்குதல்
3. ரியல் எஸ்டேட் சட்டம்
4. மக்களுக்கு நேரடியாக அளிக்கப்படும் மானியம்
5. IBC Code
6. பணவீக்க இலக்கை மாற்றுவதில் நெகிழ்வு தன்மை
7. அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் அதிகப்படியான முக்கியத்துவம்
8. இந்திய மக்களின் 80சி கீழ் சேமிப்பு
9. கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தில் அரசு உதவி
10. எம்என்சி நிறுவனங்களின் நம்பிக்கை பல வருட உயர்வை தொட்டு உள்ளது.

இந்த மாற்றங்கள் மூலம் நாட்டின் உற்பத்தி மற்றும் மூலதன முதலீடுகள் நாட்டின் ஜிடிபி பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இதன் வாயிலாக இந்திய மக்களின் தனிநபர் வருமானம் இரட்டிப்பு வளர்ச்சியை பதிவு செய்யும் எனவும் மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.
2031ல் இந்தியாவின் ஏற்றுமதி சந்தை 4.5 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, இது 2021 ஆம் அண்டின் அளவை காட்டிலும் இரட்டிப்பு வளர்ச்சியாகும். இதேபோல் அடுத்த 10 வருடத்தில் இந்திய மக்களின் தனி நபர் வருமானம் 5200 டாலர் வரையில் உயரும் எனவும் கணித்துள்ளது.
மேலும் 2031ல் இந்தியாவின் பொருளாதாரம் 8 டிரில்லியன் டாலர் வரையில் உயர்வது மட்டும் அல்லாமல் உலகிலேயே 5வது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் என்றும் கணித்துள்ளது மோர்கன் ஸ்டான்லி.


Click it and Unblock the Notifications