பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு குரூப் சி மற்றும் துணை ராணுவப் படைகள் உட்பட கெசெட் அல்லாத குரூப் பி ரேங்க் அதிகாரிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசு ஊழியர்களுக்கான உற்பத்தி திறன் உடன் இணைக்கப்படாத போனஸை (அட்-ஹாக் போனஸ்) கணக்கிடுவதற்கான உச்சவரம்பை 7000 ரூபாயாக மத்திய நிதி அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.

இந்த நிலையில் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை 2022-23 ஆம் ஆண்டுக்கு 30 நாள் ஊதியங்களுக்கு சமமான போனஸ் தொகையை எந்த உற்பத்தித் திறன் - இணைக்கப்பட்ட போனஸ் திட்டத்தின் கீழ் இல்லாத மத்திய அரசின் குரூப் சி மற்றும் துணை ராணுவப் படைகள் உட்பட கெசெட் இல்லாத குரூப் பி ரேங்க் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த போனஸ் பெறுவதற்கு மத்திய அரசு சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது. இதில் முதலாவதாக 31.3.2023 அன்று வரையில் பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தொடர்ச்சியான சேவையை வழங்கிய பணியாளர்கள் மட்டுமே இந்த உத்தரவுகளின் கீழ் போனஸ் பெர தகுதியுடையவர்கள் என அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஒருவருக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும்..?
NON-Productivity Linked Bonus தொகை பொதுவாக ஒரு நாள் அடிப்படையில் கணக்கிடப்படும், இதேபோல் வருடத்தின் மொத்த நாட்களின் சராசரி அளவீடான 30.4 என்ற எண் உடன் வகுக்க வேண்டும். இதை அனைத்தையும் மத்திய நிதி அமைச்சகம் நிர்ணயித்துள்ள போனஸ் தொகைக்கான 7000 ரூபாய் உச்சவரம்பு அளவில் இருந்து கணக்கிட வேண்டும்.
தற்போது மத்திய அரசு 2022-23 ஆம் ஆண்டுக்கு 30 நாள் ஊதியங்களுக்கு சமமான போனஸ் தொகையை அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் படி 7000X30/30.4 என கணக்கிட வேண்டும். இதன் மூலம் தகுதியுள்ள அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் 6907.89 ரூபாய் தீபாவளி போனஸ் ஆக கிடைக்கும். அனைத்து போனஸ் தொகையும் Round Off செய்யப்படும் காரணத்தால் 6908 ரூபாய் அளிக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications