மத்திய அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வியாலாக மேம்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் உருவாக்க உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம் மூலம் 14 துறைகளில் இந்த ஆண்டு செப்டம்பர் வரை ரூ 95,000 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளன என்று அதிகாரப்பூர்வ அறிக்கை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி PLI திட்டத்தின் கீழ் நவம்பர் 2023 வரை 746 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

2021-22 மத்திய பட்ஜெட் அறிக்கையில் PLI திட்டங்களுக்கு சுமார் ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
PLI திட்டத்தின் கீழ் எலக்ட்ரானிக்ஸ், தொலைத்தொடர்பு, பார்மா, வொயிட் கூட்ஸ் எனப்படும் ஏசி மற்றும் எல்இடி லைட் பாகங்கள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய துறைகளில் புதிய முதலீடுகள் ஈரக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் உற்பத்தித் திறன் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதே PLI திட்டத்தின் நோக்கம்.
PLI திட்டத்தின் கீழ் நவம்பர் 2023 வரை 746 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, 24 மாநிலங்களில் சுமார் 150க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் PLI திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிறவனங்களின் தொழிற்சாலகள் நிறுவப்பட்டுள்ளன.
செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் PLI திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிறவனங்கள் சுமார் ரூ.95,000 கோடி முதலீடுகளை செய்துள்ளது. இதன் மூலம் ரூ. 7.80 லட்சம் கோடி உற்பத்தி/விற்பனை மற்றும் 6.4 லட்சத்துக்கும் மேல் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது எனமத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதுய
2022-23 ஆம் ஆண்டில் சுமார் 2,900 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
PLI திட்டம் என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது:
உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டம் என்பது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உள்நாட்டு தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் மத்திய அரசின் முயற்சியாகும். இந்தத் திட்டம், நிறுவனங்கள் அதிகளவில் உற்பத்தி செய்வதற்கும், உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியத் தொழில்கள் எதிர்கொள்ளும் குறைபாடுகளை நீக்க உதவுகிறது.
PLI திட்டத்தில் ஒப்புத்தல் பெற்ற நிறுவனங்களுக்கு வருடாந்திர அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி வளர்ச்சி இலக்குகளை அடைவதன் மூலம் நிறுவனங்கள் வெகுமதி பெறுகின்றன.
PLI திட்டத்தின் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் வரி தள்ளுபடிகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரிச் சலுகைகள் அல்லது எளிதாக நிலம் கையகப்படுத்துதல் போன்ற்றில் பயன்படுத்திக்கொள்ள முடியும். PLI திட்டத்தின் மூலம் குறைந்த விலையில் பொருட்களை நுகர்வோர் பெற வழிவகை செய்கிறது.
PLI திட்டம் குறிப்பாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், மலிவான பொருட்களின் இறக்குமதிகளை இந்தியாவில் கட்டுப்படுத்தவும் மற்றும் ஒட்டுமொத்த இறக்குமதியை குறைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications