PMAY: 5 மாநிலத்தில் 1.07 லட்சம் வீடுகளை கட்ட மோடி அரசு ஒப்புதல்.. மோக பட்ஜெட்..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் உட்பட 5 மாநிலத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தின் வாயிலாகச் சுமார் 1.07 லட்சம் வீடுகளைக் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையிலான மத்திய அனுமதி மற்றும் கண்காணிப்புக் குழு (CSMC) 5 மாநிலத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளைக் கட்டுவதற்கு PMAY திட்டத்தின் வாயிலாக ஒப்புதல் கொடுக்கப்பட்டு உள்ளது.

 பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) திட்டத்தின் அனைவருக்கும் வீடு அளிக்க வேண்டும் என்ற திட்டத்தின் வாயிலாகச் சொந்த வீடுகளைக் கட்டவும், வாங்குபவர்களுக்கு நிதி சலுகையை அளித்து வருகிறது.

 5 மாநிலம்

5 மாநிலம்

இத்திட்டத்தின் வாயிலாக ஆந்திரா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலத்தில் சுமார் 1.07 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

 மத்திய அரசு

மத்திய அரசு

தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1.14 லட்சம், இதில் 91 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், 53 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

 7.52 லட்சம் கோடி ரூபாய்

7.52 லட்சம் கோடி ரூபாய்

இத்திட்டம் சுமார் 7.52 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப்படும் நிலையில் மத்திய அரசு சுமார் 1.85 லட்சம் ரூபாய் அளவிலான நிதியுதவியைச் செய்கிறது. மேலும் 1.85 லட்சம் கோடி ரூபாய் நிதியில் 1.14 லட்சம் கோடி ரூபாய் ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.

 நன்மை

நன்மை

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் அதிகளவில் பலன் அடைந்து வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

 வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இதேவேளையில் கொரோனா காலத்தில் கோடி கணக்கான மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ள நிலையில் சந்தையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசுக்கு இருக்கும் முக்கிய ஆயுதம் தான் இந்த ரியல் எஸ்டேட் கட்டுமானம். இதனால் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு மத்திய அரசு அதிகளவிலான ஆதரவு அளித்து வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+