மத்திய அமைச்சரவை புதன்கிழமை மேரா யுவ பாரத் (MY Bharat) என்ற தன்னாட்சி அமைப்பை நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். மேரா யுவ பாரத் அல்லது MY Bharat அமைப்பு என்றால் என்ன..? இதனால் யாருக்கு பலன்..? என்ன பலன்..? என்பதை இப்போது பார்ப்போம்.
இந்தியாவில் 5 மாநில தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் களம் மீண்டும் சூடுப்பிடித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு தேர்தல் நடக்கும் மாநிலத்தை குறித்து பல திட்டங்களை செயல்படுத்தியும், அறிவித்தும் வருகிறது. இதேபோல் மாநில அரசுகளும் பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மத்திய அமைச்சரவை மேரா யுவ பாரத் என்ற அமைப்பை நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. காரணம் மேரா யுவ பாரதத்தின் முதன்மை நோக்கம் இளைஞர் மேம்பாட்டிற்கான முழு அரசாங்க தளமாக மாற்றுவது தான். இந்த அமைப்பை நிறுவன ஒப்புதல் அளிக்கப்பட்டாலும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது.
மேரா யுவ பாரத் அமைப்பு குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், இது இளைஞர்கள் மற்றும் அவர்களுடன் அரசு ஈடுபடுவதற்கான அனைத்து முன்முயற்சிகளுக்குமான ஒன் ஸ்டாப் சொல்யூஷன் ஆக இந்த தளம் செயல்பட முடியும் என தெரிவித்தார். மேலும் மேரா யுவ பாரத் அமைப்பு இருவழி கருத்து பரிமாற்றும் அமைப்பாக இரு்ககும் எனவும் அவர் கூறினார்.
மேலும் இந்தியாவில் 15-19 வயதுக்குட்பட்ட 40 கோடி இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்காக MY (மேரா யுவா) Bharat தளத்தை தொடங்க முடிவு செய்துள்ளோம் என்று அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.
MY (மேரா யுவா) Bharat தளத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் தலைமை பன்மை உருவாக்க முடியும். தற்போது அரசு செயல்படுத்தும் திட்டத்தை பெரிய அளவில் மேம்படுத்த முடியும். இளைஞர்களை அரசுடன் இணைக்கும் வகையில் சென்டர்லைய்ஸ்டு டேட்டா பேஸ் உருவாக்க முடியும் என பிஐபி தளத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications