மத்திய அரசு பாரத்நெட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 6.4 லட்சம் கிராமங்களுக்கு அதிவேக பிராட்பேண்ட் இண்டர்நெட் சேவைக்காக 1.39 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று அரசு உயர் அதிகாரி ஈடி பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது பிராட்பேண்ட் இணைப்பு திட்டம் ஏற்கனவே 1.94 லட்சம் கிராமங்களை இணைக்கப்பட்டு உள்ள நிவையில் மீதமுள்ளவை இரண்டரை ஆண்டுகளில் முடிக்கப்படும். இதற்கான நிதிஒதுக்கீட்டை தான் தற்போது மத்திய அரசு மக்களவையில் ஒப்புதல் அளித்துள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில், நாட்டின் அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்கு ஆப்டிகல் ஃபைபர் வாயிலாக அதிவேக இண்டர்நெட் இணைப்பை வழங்குவதற்காக 1,39,579 கோடி ரூபாய்க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
மத்திய அரசு பாரத்நெட் திட்டத்தில் தற்போது மேம்படுத்தப்பட்ட முறையில் செயல்பட உள்ளது, கிராம அளவிலான தொழில்முனைவோரைப் பயன்படுத்தி, அவர்களது கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு இணைப்பை எடுத்துச் செல்லவும், பராமரிப்புக்காகவும் முழுப் பொறுப்புடன் அவர்களைப் பார்ட்னராக அமர்த்த உள்ளது.
இதன் மூலம் உள்ளூர் தொழில்முனைவோருக்கு பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (BBNL) மூலம் ரூட்டர்கள் மற்றும் கூடுதல் ஃபைபர் ஆப்டிக் கேபிள் உள்ளிட்ட தேவையான உபகரணங்கள் வழங்குவார்கள். மேலும் ஆப்டிக்கல் ஃபைபர்-ஐ எவ்வாறு பிரிப்பது மற்றும் வீடுகளில் எவ்வாறு இணைப்புகளை அமைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும் என தெரிகிறது.
இந்த கட்டமைப்பில் அரசுடன் பார்ட்னராகும் தொழில்முனைவோர்-க்கு 50% வருவாயை பகிர்ந்து அளிக்கப்படும். இதன் மூலம் ஒரு வீட்டுக்கான இணைப்புக்கு ரூ.399 திட்டத்திற்கு சந்தா செலுத்தினால், அதில் ரூ.199-ஐ தொழில்முனைவோர் பெறுவார்கள். இத்திட்டம் மூலம் 2.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications