உலகம் முழுவதும் ரெசிஷன் அச்சத்தால் நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தும், லாபம் அளிக்காத அல்லது வர்த்தகச் சந்தையில் வெற்றி அடையாத திட்டத்தை மூடியும் வருகிறது.
இதேபோல மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை நஷ்டத்தை ஏற்படுத்தும் பரிவுகளை மூட திவால் நீதிமன்றத்திற்குச் செல்ல வலியுறுத்தியுள்ளது.
இதன் மூலம் மத்திய அரசின் பொதுத்துறை இருப்புகளைக் குறைக்கத் திட்டமிடும் பணிகள் வேகப்படுத்த முடியும்.
நஷ்டத்தை அளிக்கும் பிரிவுகள்
திங்களன்று மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தை அளிக்கும் பிரிவுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அமைப்பு ஒப்புதல் அளிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் Insolvency and Bankruptcy Code (IBC) இன் கீழ் திவால் நிலை விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாக ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
ஒன்பது மாதங்கள்
ஒரு நிறுவனம் அனுமதி கோரும் நாளிலிருந்து கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களில் நஷ்டம் அளிக்கும் நிறுவன பிரிவுகளை மூட அரசு திட்டமிடுகிறது. இதேபோல் பொதுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தை அணுகுவதன் மூலம் தங்கள் நிறுவன பிரிவுகளை மூடுவதற்குத் தேர்வுசெய்யலாம் என்று தற்போதைய விதிமுறையின் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இருப்பு
அரசு நிறுவனங்களில் மத்திய அரசின் இருப்பைக் குறைக்க நரேந்திர மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு இந்தப் புதிய விதிமுறைகள் வேகப்படுத்தும் புதிய உந்து சக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒரு நிறுவனத்தை மூடும் போது நிலத்தின் உரிமையைக் கையாளுவதில் தான் பெரும் பிரச்சனையாக உள்ளது என அரசு தரப்பில் கூறப்படுகிறது.
நிலத் பிரச்சனைகள்
இந்த நிலத் பிரச்சனைகள் இனிமேல் பொதுத்துறை நிறுவனங்களை மூடும் போது இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, மூடப்படும் நிறுவனங்களின் தாய் நிறுவனங்கள் அவற்றின் துணை நிறுவனங்களின் நிலச் சொத்துகளைப் பிரிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் பணிகள் வேகப்படுத்தும். நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலத்திற்கு மாநில அரசுகள் செலுத்த வேண்டிய இழப்பீடுகளைத் தள்ளுபடி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
65000 கோடி ரூபாய்
பிரதமர் தலைமையிலான மத்திய அரசு 2023 ஆம் நிதியாண்டில் அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு அளிப்பதன் மூலம் 65000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதனால் அடுத்தடுத்து நிறுவனங்களைத் தனியார்மயமாக்கல் செய்யத் தயாராகி வருகிறது.
IDBI வங்கி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு IDBI வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்த நிலையிலும், விருப்ப விண்ணப்பங்களைப் பெற துவங்கியுள்ள நேரத்தில் கண்டெய்னர் கார்ப் ஆப் இந்தியா, ஏர் இந்தியாவின் பிற கிளை நிறுவனங்களை அடுத்தடுத்து தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளதாகச் சில நாட்களுக்குத் தகவல் வெளியானது.
ஐபிஓ திட்டம்
இதேபோல் ஜல் சக்தி அமைச்சகத்தின் இன்ஜினியரிங் கண்சல்டன்சி நிறுவனமான Indian Renewable Energy Development Agency மற்றும் கட்டுமான நிறுவனமான Wapcos Ltd, மற்றும் Export Credit Guarantee Corp. of India Ltd ஆகிய 3 நிறுவனத்தையும் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications