பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக ஆட்சி அமைத்த பின்பு தாக்கல் செய்யப்பட்ட முதல் முழு பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல அறிவிப்புகள் நடுத்தர மக்களைப் பெரிய அளவில் பாதிக்கும் வண்ணம் அமைந்தது, இதனால் மத்திய அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நிலையில், பிரச்சனையை உணர்ந்து இதை சரி செய்யும் வகையில் நிதி மசோதாவில் அறிவித்த சொத்து வரி தொடர்பான சில நிபந்தனைகளில் மாற்றம் செய்ய உள்ளது. இது வரி செலுத்துவோருக்கும் மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கு பெரும் நிம்மதியை அளிக்க உள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த வரி சலுகையை வழங்குவதற்காக, நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவில் திருத்தங்களை முன்வைத்துள்ளார். இந்த ஒரு அறிவிப்புக்காகத் தான் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக்கொண்டு இருந்தது என்றால் மிகையில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு முன்மொழியப்பட்ட புதிய சொத்து வரி விதிகளை இந்திய அரசு தளர்த்த உள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்த மாற்றங்கள் நடுத்தர வர்க்கத்தின் மீதான நிதிச் சுமையை அதிகரித்ததாக எழுந்த விமர்சனங்கள் தான்.
ஜூலை 23-ம் தேதி அன்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில், இந்திய ரியல் எஸ்டேட் துறையில் நீண்ட கால மூலதன வரியை 20% -லிருந்து 12.5% ஆக குறைத்துள்ளது, ஆனால் மூலதன ஆதாயம் கணக்கிடப்படுவதற்கு முன்பு ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பின் விலையைப் பணவீக்கத்திற்கு இணையாகச் சரிசெய்ய அனுமதித்த இண்டக்சேஷன் சலுகையை ரத்து செய்தது. இது தான் பெரிய பிரச்சனையாக வெடித்தது.
இந்த நிலையில் தற்போது மத்திய அரசு, ஜூலை 23 ஆம் தேதிக்கு முன்பு வீடு அல்லது நிலம் வாங்கி /விற்றுள்ள மக்களுக்கு தங்களது விருப்பத்தின்படி புதிய வரி விதிப்பு முறை அல்லது பணவீக்க அடிப்படையில் கேப்பிடல் கெயின் வரியை கணக்கிட்டு 20% வரியை செலுத்தும் பழைய முறையை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்குகிறது என்று ராய்ட்டர்ஸ் அரசாங்க ஆவணத்தில் பார்த்ததாக தெரிவிக்கிறது. ரியல் எஸ்டேட் சொத்துக்கள் குறைந்தது 24 மாதங்கள் வைத்திருந்தால் நீண்ட காலமாக முதலீடாக கருதப்படுகின்றன, இந்த கால அளவீட்டில் எவ்விதமான மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து நடுத்தர வர்க்கத்தின் மீதான வரிசுமையை அதிகரிக்கும் நோக்கத்துடன் இருந்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2024 ஜூலை 23 க்கு முன்பு வாங்கப்பட்ட சொத்துக்களை விற்பவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு பழைய அல்லது புதிய வரித் திட்டங்களில் தங்கள் மூலதன ஆதாய வரியைக் கணக்கிட அனுமதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இது இந்திய ரியல் எஸ்டேட் துறைக்கு மிகவும் முக்கியமானதாகும்.
இண்டக்சேஷன் சலுகையை முழுமையாகப் புரிந்து கொள்வதற்காக ஒரு உதாரணம்: விக்ரம் என்பவர் 2002-2003 ஆம் நிதியாண்டில் ரூ.25 லட்சத்திற்கு ஒரு நிலத்தை வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். 2023-2024 ஆம் நிதியாண்டில் அந்த நிலத்தை ரூ.1 கோடிக்கு விற்பனை செய்கிறார்.
இதற்கு முந்தைய விதிகளின்படி, ரூ.25 லட்சம் வாங்கிய விலையை, வருமான வரித் துறையால் அறிவிக்கப்படும் செலவின பணவீக்க குறியீட்டு ( Cost Inflation Index - CII) எண்களைக் கொண்டு பணவீக்கத்திற்கு ஏற்ப உயர்த்திக் காட்ட வேண்டும். அப்படி பார்க்கும் போது கேப்பிடல் கெயின் அளவு 17,14,280 ரூபாய், இதற்கு 20 சதவீத வரி எனில் 3,42,850 ரூபாய்.
ஆனால், புதிய விதியின் படி நிலத்தை வாங்கிய விலையில் இருந்து நிலத்தை விற்பனை செய்த தொகையை நேரடியாகக் கழித்து, மூலதன லாபத்தைக் கணக்கிட வேண்டும். இதில் கேப்பிடல் கெயின் என்பது 7500000 இதற்கு 12.5 சதவீத வரி என்றால் 937500 ரூபாய் செலுத்த வேண்டும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications