இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு 2023 நடைபெற உள்ளது. இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 8-10 ஆம் தேதி வரை பொது விடுமுறையை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
25 நாடுகளுக்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க தங்களது பிரதிநிதிகளுடன் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளனர். விருந்தினர்கள் தங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன. டெல்லியில் இப்போதே பல விருந்தினர்கள் வந்துவிட்டதால் நகரம் களைகட்டத் தொடங்கி விட்டது.

ஜி20 மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக பணத்தை மத்திய அரசு வாரி இறைத்து வருகிறது. தலைவர்கள் பாதுகாப்புக்காக குண்டு துளைக்காத 50 ஆடி கார்களை வாங்குவதற்கு ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் இருந்து 50 குண்டுதுளைக்காத லெப்ட்ஹாண்டு டிரைவ் ஆடி கார்களை வெளியுறவுத் துறை மூலம் மத்திய அரசு இறக்குமதி செய்துள்ளதாக டெல்லி போலீஸின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறிப்பாக எந்த மாடல் ஆடி கார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் ஆடி ஏ8 எல் செக்யூரிட்டி என்ற மாடலாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
இதன் முந்தைய புல்லட் புரூப் செடான் இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் விலை ரூ.9 கோடி. புதிய மாடல் காரின் விலை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஜெர்மனியில் இருந்து புல்லட் புரூப் கார்களை இந்திய அரசு இறக்குமதி செய்திருந்தாலும் அவை மானிய விலையில் வாங்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் கார்களின் மொத்த விலை ரூ.400 கோடி.
சிறப்பு அணிவகுப்பு கார்களை இயக்குவதில் டெல்லி போலீஸாருக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் லெப்ட்ஹாண்டு டிரைவ் வாகனத்தை ஓட்டுவது சட்டவிரோதமாகும். இந்த சட்டச் சிக்கலைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் நாட்டில் ரைட் ஹாண்டு டிரைவ் சாலைகள் இருக்கும் பட்சத்தில் லெப்ட் ஹாண்டு டிரைவ் கார்கள் எப்படி பாதுகாப்பாக செல்ல முடியும் என்று கவலை தெரிவிக்கின்றனர்.
ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில்தான் ரைட் ஹாண்டு டிரைவ் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications