இந்தியாவில் ஸ்மார்ட்போன் அசெம்பிளி பணிகளைச் செய்ய அதிகப்படியான இந்திய நிறுவனங்கள் களமிறங்குவதால், ஸ்மார்ட்போன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பல்வேறு உதிரிப்பாகங்கள் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.
சீனாவில் இருந்து வெளியேறிய பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை அமைத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுக்கு உற்பத்தி ஒப்பந்தத்தைக் கொடுத்துள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் மேக் இன் இந்தியா என்ற நிலையைத் தாண்டி மேக் ஃபார் வோர்ல்டு என்று கதை மாறியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியை அதிகரிக்கும் இலக்குடன் இந்த ஆண்டு இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக மத்திய நிதியமைச்சகம் பல்வேறு உதிரிப்பாகங்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு உள்ளது என அறிக்கை வெளியிட்டு உள்ளது.
தற்போது வரி குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியலில் ஸ்மார்ட்போன் பேட்டரி கவர், ஃபிரன்ட் கவர், மிடில் கவர், மெயின் லென்ஸ், பே கவர், GSM ஆண்டெனா, PU கேஸ்/சீலிங் கேஸ்கெட், பிற பாலியூரிதீன் நுரை (Foam) சீல் கேஸ்கட்கள்/கேஸ், சீல் கேஸ்கட்கள்/கேஸ்கள் போன்ற அனைத்துத் தனிப்பட்ட பாலிமர்கள் அல்லது பாலிமர்களின் கலவைகள், சிம் சாக்கெட், ஸ்க்ரூ, பிளாஸ்டிக் மற்றும் உலோக இயந்திர பொருட்களின் வரி குறைக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள் மேலே குறிப்பிட்ட உதிரிபாகங்களைத் தயாரித்தால், தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் மீதான இறக்குமதி வரியும் பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த மாதம் India Cellular and Electronics Association (ICEA) அமைப்பு, வியட்நாம், சீனா, மெக்சிகோ உள்ளிட்ட 7 முக்கிய உற்பத்தி நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் உதிரிப்பாகங்களுக்கான வரி அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியை அதிகரிக்க இறக்குமதியைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது.
இதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சகம் இந்த ஆண்டு இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்பு பல்வேறு உதிரிப்பாகங்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications