பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஜூலை 1ஆம் தேதி பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்திய நிலையில், தற்போது இதன் அளவை குறைத்து ரிலையைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற தனியார் எரிபொருள் ஏற்றுமதி நிறுவனத்திற்குத் தளர்வு அளித்துள்ளது.
மத்திய அரசு இந்திய மக்களுக்குக் குறிப்பாக ரீடைல் சந்தையில் மக்களுக்குப் போதுமான எரிபொருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருள் மீதான வரியை அதிகரித்தது.
இந்த அறிவிப்பு வெளியான போது இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யும் அனைத்து நிறுவனப் பங்குகளும் சரிந்தது.
மத்திய நிதியமைச்சகம்
ஜூலை 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 13 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதேபோல் பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 6 ரூபாயும், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 1 ரூபாயும் உயர்த்தப்பட்டது.
அரசுக்குக் கூடுதல் வருமானம்
இந்த வரி உயர்வின் மூலம் நடப்பு நிதியாண்டில் மட்டும் மத்திய அரசுக்கு எரிபொருள் ஏற்றுமதி தற்போது இருக்கும் அளவு தொடர்ந்தால் சுமார் 12 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும், அதாவது 94,800 கோடி ரூபாய் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டது.
எதிர்ப்பு
ஆனால் இதேவேளையில் எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவிய வேளையில் மத்திய நிதியமைச்சர் இந்த வரி விதிப்பை மறு ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து 19 நாட்களுக்குப் பின்பு இன்று இந்த ஏற்றுமதி வரி விதிப்பு குறைக்கப்பட்டு உள்ளது.
வரித் தளர்வு
இன்று வெளியான மத்திய அரசின் அறிவிப்பில் டீசல் மற்றும் விமான எரிபொருள் மீது விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரியில் 2 ரூபாய் குறைக்கப்பட உள்ளது, இதேபோல் பெட்ரோல் மீது விதிக்கப்பட்ட 6 ரூபாய் ஏற்றுமதி வரியை மொத்தமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதி
இதேபோல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் வரியை ஒரு டன்னுக்கு 27 சதவீதம் குறைத்து 17,000 ரூபாயாகக் குறைத்துள்ளது. இந்தியாவில் இருந்து மிகவும் குறைந்த அளவிலான கச்சா எண்ணெய் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மத்திய அரசு ஏற்றுமதி குறைப்பிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததும் முக்கிய காரணமாக உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்த வரித் தளர்வுகள் மூலம் இந்தியாவின் முன்னணி எரிபொருள் ஏற்றுமதி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் முன்னணி கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப் (ONGC) நிறுவனம் பெரிய அளவில் பலன் அடைய உள்ளது.
ரிலையன்ஸ் மற்றும் நயாரா எனர்ஜி
ரிலையன்ஸ் மற்றும் ரோஸ்நேப்ட் ஆதரவு நயாரா எனர்ஜி லிமிடெட், இந்தியாவின் ஒரே தனியாருக்குச் சொந்தமான சுத்திகரிப்பு நிறுவனங்கள், இந்தியாவின் ஒட்டுமொத்த பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதியில் 80% முதல் 85% வரையிலான ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த வரித் தளர்வு ரிலையன்ஸ் மற்றும் நயாரா எனர்ஜி-க்கு ஜாக்பாட் தான்.
விண்ட்ஃபால் டாக்ஸ்
விண்ட்ஃபால் டாக்ஸ் (windfall tax) என்பது ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது தொழில்துறைக்கு திடீரென அதிகப்படியான லாபம் கிடைக்கும் போது, இதில் இருந்து அரசு கூடுதலான வரி வருமானத்தை பெற விதிக்கப்படும் அதிகப்படியான வரி.
மார்ச் காலாண்டில் ONGC போன்ற கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன. இதற்கு முக்கிய காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு பேரலுக்கு 139 டாலராக ஆக உயர்ந்தது.
இதில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள்-ம் அடக்கம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications