இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைவர் தினேஷ் காரா-வின் பதவிக் காலத்தை 2023 அக்டோபரைத் தாண்டி அவர் 63 வயது அடையும் வரை இப்பதவியில் இருக்க அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்து நீட்டித்துள்ளது.
தினேஷ் காரா 1961 ஆம் ஆண்டு 28 ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் பிறந்தார், தற்போது இவருக்கு வயது 62 ஆகும், தற்போது அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்ததன் படி 2024 ஆம் ஆண்டு 28 ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் வரையில் எஸ்பிஐ தலைவர் பதவியில் தினேஷ் காரா செயல்படலாம்.

இதோடு அமைச்சரவை நியமனக் குழு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அஷ்வினி திவாரியின் பதவிக் காலத்தையும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
SBI தலைவரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 28, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நீட்டிப்பு பிரதமர் அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளதாகவும் ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவும் அமைச்சரவை நியமனக் குழுவும் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது
தினேஷ் காரா 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று எஸ்பிஐயின் தலைவராக மூன்று ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். இந்திய வங்கி விதிமுறைகளின் படி எஸ்பிஐ வங்கி தலைவராக 63 வயது வரையில் ஒருவர் இப்பதவியில் இருக்க முடியும். இதன் படி தினேஷ் காரா பதவி காலம் அடுத்த ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தினேஷ் காரா 1984 ஆம் ஆண்டில் எஸ்பிஐ வங்கியில் Probationary Officer ஆகச் சேர்ந்தார். கடந்த 40 வருடத்தில் ரீடைல் கடன், எஸ்எம்இ மற்றும் கார்ப்பரேட் கிரெடிட், டெபாசிட் திரட்டுதல், சர்வதேச வங்கி செயல்பாடுகள் மற்றும் கிளை மேலாண்மை போன்ற அனைத்து வங்கி பிரிவுகளிலும் அனுபவம் பெற்றார்.
தினேஷ் காரா எஸ்பிஐ வட்டாரங்களில் general banking specialist ஆக அறியப்படுகிறார். இது தவிர, எஸ்பிஐ வெளிநாட்டு விரிவாக்கப் பணியில் தினேஷ் காரா வங்கியின் சிகாகோ அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டார், மேலும் வெளிநாட்டு வங்கியான இந்தியன் ஓஷன் இன்டர்நேஷனல் பேங்க் மொரிஷியஸ் வங்கியின் கையகப்படுத்துதலில் முக்கியப் பங்கு வகித்தவர்.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் எஸ்பிஐ வங்கி பங்குகள் 0.31 சதவீதம் வரையில் உயர்ந்து 594.10 ரூபாய் அளவில் முடிந்தது. எஸ்பிஐ வங்கி பங்குகள் 2023 ஆம் ஆண்டில் 2.96 சதவீதம் வரையில் சரிவை சந்தித்துள்ளது. இதேபோல் எஸ்பிஐ கார்ட் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 0.94 சதவீதம் வரையில் உயர்ந்து 797.25 ரூபாய் அளவில் முடிந்தது. எஸ்பிஐ கார்டு பங்குகள் 2023 ஆம் ஆண்டில் வெறும் 0.30 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications