இந்திய அரசு திங்கள்கிழமை விமான எரிபொருள் (ஏடிஎப்), கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீது கடந்த சில வருடங்களாக விதித்து வந்த விண்பால் வரியை மொத்தமாக ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஓஎன்ஜிசி போன்ற பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் லாபம் பெற வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
அக்டோபர் மாதம் இந்திய நிதியமைச்சகம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தி மீதான விதிக்கப்பட்ட வரியை (Windfall Tax) நீக்குவது குறித்து ஆய்வு செய்யும் என பிரதமரின் ஆலோசகர் தருண் கபூர் புதன்கிழமை தெரிவித்த நிலையில் இன்று இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2022 ஜூலை மாதத்தில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததையடுத்து, உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி மீது விதிப்பு கட்டணம் விதிக்கப்பட்டது. இது உற்பத்தியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெறும் அதிக லாபத்திலிருந்து கூடுதல் வருவாயைப் பெறுவதில் இருந்து அரசு லாபம் பார்க்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது Windfall Tax நீக்கியதன் மூலம், குறிப்பாக சுத்திகரிப்பு மார்ஜின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதி மீதான சாலை மற்றும் கட்டமைப்பு கட்டணத்தையும் (RIC) அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் துறை மீதான நிதி சுமையை மேலும் குறைத்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் அரசு கச்சா எண்ணெய் மீதான விதிப்பு கட்டணத்தை ரத்து செய்தது. அப்போது ஒரு டன் கச்சா எண்ணெய்க்கு ரூ.1,850 விதிக்கப்பட்டிருந்தது. மேலும், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான விதிப்பு கட்டணமும் செப்டம்பர் மாதத்தில் ரத்து செய்யப்பட்டது.
Windfall Tax என்பது சில குறிப்பிட்ட தொழில்கள், பொருளாதார நிலைமைகளால் இயல்பான வர்த்தக நடைமுறையை தாண்டி அதிக லாபம் ஈட்டும் போது அரசாங்கம் விதிக்கும் ஒரு வரியாகும்.
2022 ஆம் ஆண்டில் உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்ததால் இந்தியாவில் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் அதிக லாபம் கிடைத்தது. இதனால் இந்திய அரசு இந்தத் தொழில்களில் இருந்து அதிகப்படியான லாபத்தை வசூலிக்கும் நோக்கில் இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் மீது சிறப்பு வரியை விதித்தது.
மத்திய அரசின் இந்த சமீபத்திய அறிவிப்பு திங்கள்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1.37 உயர்ந்து வர்த்தகமாகின, இதேபோல் ONGC பங்குகள் 0.41 சதவீதம் வளர்ச்சி அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முதலீடு அதிகரிக்க வழிவகை செய்யும்.
More From GoodReturns

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications