பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் பொம்மை தயாரிப்பு அதிகளவிலான முக்கியத்துவம் கொடுத்து, பல நிறுவனங்கள் இத்துறையில் ஈர்த்து தற்போது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொம்மை தயாரிப்பில் சீனாவுக்கு போட்டியாக இந்தியா உயர இத்துறையில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டது மறக்க முடியாது.
இந்த நிலையில் இதற்கு அடுத்தக்கட்டமாக இந்தியாவில் இருக்கும் முக்கியான 18 கலைத்துறையே தேர்வு செய்து இத்துறையில் இருக்கும் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், இவர்களின் வர்த்தகத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லவும் முக்கியமான திட்டம் கொண்டவரப்பட்டது.

மோடியால் துவங்கப்பட்ட விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் கைவினைஞர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு 8 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இத்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில் தெரிவித்தார். 2023-24 பட்ஜெட்டில் மத்திய அரசு இத்திட்டத்திற்காக ஏற்கனவே 13,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது என்று விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் தொடக்க நிகழ்வின் போது அவர் கூறினார்.
விஸ்வகர்மா யோஜனாவின் திட்டத்தின் தொடக்க விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான விபரங்களை பகிர்நாந்தார், கைவினைஞர்களுக்கு அடமானம் இல்லாத அதாவாது கொலேட்டரல் எதுவும் இல்லாமல் 5 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இத்திட்டத்தில் தச்சர், பொற்கொல்லர், கொல்லர், கொத்தனார், கல் சிற்பம், முடிதிருத்தும் மற்றும் படகு தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 18 பணிகளுக்கு அரசு ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கும் என்றார். இந்த 3 லட்சத்தில் முதலில் 1 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்படும், இதை 18 மாதத்தில் திருப்பி செலுத்திய பின்பு 2 லட்சம் ரூபாய் அளவிலான கடனை பெற தகுதி அடைவார்கள்.
விஸ்வகர்மா யோஜனாவின் திட்டத்தின் கீழ் நிதியுதவி மட்டும் அல்லாமல் திறன் வளர்ப்பு பயிற்சி, நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த புரிதல், பசுமை தொழில்நுட்பம், பிராண்ட் ப்ரோமோஷன், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தை உடன் இணைப்பு, டிஜிட்டல் பேமெண்ட், சமுக பாதுகாப்பு போன்ற முக்கியமான விஷயங்களிலும் உதவி செய்கிறது.
விஸ்வகர்மா யோஜனாவின் திட்டத்தில் தகுதியானவர்கள் அனைவருக்கும் 500 ரூபாய் ஊக்க தொகை உடன் 5 நாள் ஸ்கில் டிரைனிங் அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு பயனாளியும் 3 அடுக்கு அணுகுமுறையில் பயன்பெறுவார்கள். இதேபோல் டூல்கிட் வாங்குவதற்கு 15000 தொகையும், டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் முக்கியமான சில சலுகையும் மாதாந்திர அளவில் அளிக்க உள்ளது மத்திய அரசு.
இந்த திட்டம் மூலம் பட்டியல் சாதியினர், பழங்குடியினர், ஓபிசி, பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications