இந்திய அரசுக்கு சொந்தமான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா அதீத கடனிலும் தொடர் நஷ்டத்திலும் இயங்கி வரும் காரணத்தால், மோடி தலைமையிலான மத்திய அரசு ஏர் இந்தியாவை விற்பனை செய்யப் பல வருடங்களாக முயற்சி செய்து வரும் நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
பல போட்டிகள் மத்தியில் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா, ஏலத்தின் மூலம் வென்றுள்ள நிலையில், இன்று மத்திய அரசு டாடா குழுமத்திடம் மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களை ஒப்படைக்க உள்ளது.
ஏர் இந்தியா - டாடா குழுமம்
ஏர் இந்தியா நிறுவனத்தைப் பல மாதங்களுக்கு முன்னரே டாடா பெற்று இருக்க வேண்டிய நிலையில் பல காரணங்களுக்காக தொடர்ந்து தாமதமானது. இந்நிலையில் கடந்த வாரம் திட்டமிட்டபடி குடியரசு தினத்திற்கு அடுத்த நாள் அதாவது ஜனவரி 27ஆம் தேதி ஏர் இந்தியாவின் உரிமையை டாடா குழுமத்தின் டேலெஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி
டாடா குழுமம் ஏர் இந்தியாவின் உரிமைகளை மத்திய அரசிடம் இருந்து கைப்பற்றுவதற்கு முன்பாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சந்திரசேகரன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்திக்க உள்ளார். இந்தக் கூட்டத்திற்குப் பின்பு ஏர் இந்தியாவின் உரிமையை டாடா குழுமம் பெற உள்ளது.
நிர்வாகக் குழு மாற்றம்
ஏர் இந்தியா-வின் உரிமையை டாடா குழுமத்தின் டேலெஸ் கைப்பற்றிய கையோடு, ஏர் இந்தியாவில் தற்போது இகுக்கும் நிர்வாகக் குழு மொத்தமாக ராஜினாமா செய்து வெளியேற உள்ளது. இதன் பின் உடனடியாக டாடா குழுமம் உருவாக்கிய நிர்வாக உடனடியாக ஏர் இந்தியாவின் நிர்வாகத்தைக் கையில் எடுக்க உள்ளது.
புதிய வெளிநாட்டுச் சிஇஓ
ஏர் இந்தியா-வின் உரிமையை டாடா குழுமத்தின் டேலெஸ் கைப்பற்றிய கையோடு, ஏர் இந்தியாவில் தற்போது இகுக்கும் நிர்வாகக் குழு மொத்தமாக ராஜினாமா செய்து வெளியேற உள்ளது. இதன் பின் உடனடியாக டாடா குழுமம் உருவாக்கிய நிர்வாக குழு உடனடியாக ஏர் இந்தியாவின் நிர்வாகத்தைக் கையில் எடுக்க உள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் - ஏர் ஏசியா இந்தியா
இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் டாடா குழுமத்தின் புதிய நிர்வாகம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் - ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தை இணைக்க உள்ளதும் உறுதியாகியுள்ளது. டாடா குழுமம் ஏர் இந்தியா மூலம் இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
18000 கோடி ரூபாய் டீல்
ஏர் இந்தியா விற்பனை அக்டோபர் 8ஆம் தேதி உறுதியான நிலையில், இந்த விற்பனை மூலம் மத்திய அரசு சுமார் 18000 கோடி ரூபாய் பெற உள்ளது. இதில் 2700 கோடி ரூபாய் அரசுக்குப் பணமாகவும், மீதமுள்ள தொகை ஏர் இந்தியா தனது கடனை தீர்க்க பயன்படுத்த உள்ளது. அனைத்திற்கும் மேலாக ஏர் இந்தியா மூலம் தினமும் ஏற்படும் பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்து மத்திய அரசு தப்பித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications