7ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போது 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான DA மற்றும் மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான DR 4% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளார்.
அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான DA மற்றும் ஓய்வூதியர்களுக்கான DR 42% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 38 சதவீத்ததிலிருந்து 4% உயர்ந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஜனவரி 1 2023 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை அறிவித்து வருகிறது.
வருடத்திற்கு இரண்டுமுறை உயர்த்தப்படும்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் ஆண்டுக்கு இருமுறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தியமைக்கப்படுவதை கவனிக்க வேண்டும்.
இந்தியாவில் விலைவாசி சுமையை குறைக்க மத்திய அரசு இந்த அகவிலைப்படி மூலம் ஈடு செய்கிறது.
DA எவ்வாறு கணக்கிடப்படுகிறது!
அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பின்னர் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் எவ்வளவு உயரும் என்ற கணக்கீட்டை இங்கே பார்க்கலாம்.
அடிப்படை சம்பளம் = ரூ.16,000 எனில்
38 சதவீத அகவிலைப்படி = ரூ.6,080 (மாதத்துக்கு)
42 சதவீத அகவிலைப்படி = ரூ.6,720 (மாதத்துக்கு)
உயர்வு =6,720 - 6,080 = ரூ 640
மொத்த சம்பள உயர்வு - 640 x 12 = ரூ.7,680
அடிப்படை சம்பளம் = ரூ.23,500 எனில்
38 சதவீத அகவிலைப்படி = ரூ.8,930 (மாதத்துக்கு)
42 சதவீத அகவிலைப்படி = ரூ.9,870 (மாதத்துக்கு)
உயர்வு = 9,870 - 8,930 = ரூ.940
மொத்த சம்பள உயர்வு - ரூ.940 x 12= ரூ.11,280
அடிப்படை சம்பளத் தொகை
இதேபோல, அடிப்படை சம்பளத் தொகையைப் பொறுத்து 42 சதவீத அகவிலைப்படி உயர்வுடன் கணக்கிட்டு மொத்த சம்பள உயர்வு எவ்வளவு என்று பார்க்கலாம்.
மத்திய அரசு ஓய்வூதியம் 42%!
மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் அகவிலை நிவாரணம் (DR) 42% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அடிப்படை ஓய்வூதியம் = ரூ.40,100 எனில்
38 சதவீத அகவிலைப்படி = ரூ.15,238 (மாதத்துக்கு)
42 சதவீத அகவிலைப்படி = ரூ.16,842 (மாதத்துக்கு)
உயர்வு = 16,842 - 15,238 = ரூ. 1,604
மொத்த ஓய்வூதிய உயர்வு - ரூ.1,604x 12= ரூ.19, 248 ஆக இருக்கும்.
இந்த ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வும் ஜனவரி 1 2023 முதல் மத்திய அரசு ஊதியம் பெறுபவர்களுக்கு, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் பொருந்தும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications