இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும் போது அதன் மீது மத்திய அரசு விதிக்கும் விண்ட்ஃபால் வரியை ஒரு டன்னுக்கு 10,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை உயர்த்துவதாக அறிவித்தது. இப்புதிய வரி விகிதங்கள் செப்டம்பர் 30, 2023 முதல் அமலுக்கு வருகிறது.
இதற்கிடையில், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் டீசல் மீதான விண்ட்ஃபால் வரியை லிட்டருக்கு 5.50 ரூபாயில் இருந்து 5 ரூபாயாகவும், ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ATF) லிட்டருக்கு 3.50 ரூபாயில் இருந்து 2.50 ரூபாயாகவும் குறைக்க முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி இந்தியாவில் சுத்திகரிப்பு செய்து உலக நாடுகளுக்கு டீசல் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் கூடுதல் லாபம் பெற உள்ளது. இதில் முக்கியாமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்கள் கூடுதல் லாபத்தை பெற உள்ளது.
பெட்ரோல் ஏற்றுமதி தொடர்ந்து விண்ட்ஃபால் வரி வரம்பிற்கு வெளியே உள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தனது அறிக்கையில் விளக்கம் கொடுத்துள்ளது. செப்டம்பர் 15 மத்திய அரசு விண்ட்ஃபால் வரியை திருத்தம் செய்தது, அப்போது கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை டன்னுக்கு ரூ. 6,700 லிருந்து ரூ.10,000 ஆக மத்திய அரசு உயர்த்தியது.
இதேபோல் டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 6 ரூபாயில் இருந்து 5.50 ரூபாயாக குறைக்கப்பட்டது மற்றும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ATF) மீதான வரி 4 லிட்டர் ரூபாயில் இருந்து 3.50 ரூபாயாக குறைக்கப்பட்டது. இதற்கு முன்பு ஜூலை 1, 2022 அன்று பெட்ரோல் மற்றும் ஏடிஎஃப் மீது லிட்டருக்கு ரூ.6 ஏற்றுமதி வரியும், டீசல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.13 வரியும் விதித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒரு டன்னுக்கு ரூ.23,250 வரி விதிக்கப்பட்டது.
சமீபத்தில் மத்திய அரசு கச்சா எண்ணெய், டீசல், பெட்ரோல் மீதான விண்ட்ஃபால் வரி விதிப்பை ஒவ்வொரு 2 வாரத்திற்கும், அல்லது கச்சா எண்ணெய் விலை மாற்றத்தின் அடிப்படையில் வரி திருத்தப்படுகிறது. தற்போது உலக நாடுகளை அச்சறுத்துவது கச்சா எண்ணெய் விலை உயர்வு தான்.
WTI கச்சா எண்ணெய் விலை நேற்றைய வர்த்தகத்தில் ஒரு பேரலுக்கு 1.00 சதவீதம் சரிந்து 90.72 டாலராக உள்ளது, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.07 சதவீதம் சரிந்து 95.31 டாலராக உள்ளது. இதேவேளையில் OPEC பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை 2.28 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 97.48 டாலராக உள்ளது. அடுத்த சில நாட்களில் 100 டாலர் அளவீட்டை எட்டும் அளவில் இருக்கும் காரணத்தால் உலக நாடுகள் பெரும் கலக்கத்தில் உள்ளது.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications