சமூக ஊடகங்களில் பிரபலங்களாக இருப்பவர்கள், பிரபலங்கள் செய்யும் விளம்பரங்கள் மீது இந்திய நுகர்வோர் விவகாரத் துறை (Department of Consumer Affairs) பல கட்டுப்பாடுகளையும், விதிகளையும் மார்ச் 6 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற பிரபலங்கள் (Celebrities) உள்பட சமூக ஊடக பிரபலங்களுக்கு (Social Media Influencers) மத்திய அரசு சில விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. விதிமுறைகளை மீறும் சமூக ஊடக பிரபலங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) பிரபலங்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்களுக்கு வழிகாட்டு விதிமுறைகளை வகுத்துள்ளது.
விதிமுறைகள்!
சமூக ஊடக பிரபலங்கள் மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைக் செய்யக்கூடாது. பிரபலங்கள் ஒப்பந்தமாகும் அல்லது வெளியிடும் விளம்பரங்கள் குறித்த போதுமான அறிவையும், அந்த பொருள் அல்லது முதலீடு குறித்த தெளிவான விளக்கத்தையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
முதலீடு
போதுமான ஆராய்ச்சிகள் இல்லாமல், மக்களை ஏமாற்றும் முதலீடுகளைப் பற்றி ஊகத்தின் அடிப்படிடையில் விளம்பரங்களைச் செய்யக்கூடாது.
விளம்பரம் செய்யும் பிராண்ட் குறித்த போதுமான அறிவும், அதில் மீடியா பிரபலங்கள் முதலீடு செய்துள்ளார்களா என்பது குறித்தும் வெளியிட வேண்டும்.
கட்டுப்பாடு
அப்படி சமூக ஊடக பிரபலங்கள் ஈடுபடாத எந்தவொரு திட்டம் அல்லது உபயோகப்படுத்தாத பொருட்களைப் பற்றி விளம்பரங்கள் செய்யக் கூடாது.
முதலீடுகள் குறித்து வெளியிடும் விளம்பரங்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களை மக்கள் நன்றாக பார்க்கும்படி எழுத்துக்களும், எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் அவை இருக்க வேண்டும்.
தெளிவான விளக்கம்
மேலும் வீடியோ அல்லது பதிவுகளில் விளம்பரம் செய்யும் போது "advertisement" "ad" "sponsored" "collaboration" அல்லது "partnership" போன்ற வார்த்தைகள் கட்டாயம் இருக்க வேண்டும். இது HashTag விடிவிலோ அல்லது தலைப்புகளிலோ இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இதில் விதிக்கப்பட்டு உள்ளது.
அபராதம்!
இதேபோல ஏற்கெனவே சென்ற ஆண்டு ஜூன் மாதம், மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை கட்டுப்படுத்த வழிகாட்டு விதிமுறைகளை நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதில் இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியானது.
மக்கள் விழிப்புணர் தேவை!
சமூக ஊடகங்களில் திளைத்துப்போகும் மக்கள் அதில் வரும் பிரபலங்கள் சொல்லும் விஷயங்களை அப்படியே நம்பக் கூடாது என்பது தான் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
சமூக ஊடக பிரபலங்கள் பலரும் விளம்பரக் கம்பெனிகளிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு போதுமான அனுபவ அறிவு இல்லாமல், மக்களிடம் அவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி பிராண்ட் மார்க்கெட்டிங் செய்கின்றனர்.
மக்களுக்கு விழிப்புணர்வு தேவை!
அதனால் மக்கள் ஒருமுறைக்குப் பலமுறை அச்செய்திகள் குறித்து சொந்தமாக ஆராய்ந்து, சரியான வழிகாட்டுதல்கள் உடன் தான் முதலீடுகளையோ அல்லது பொருட்களையோ வாங்க வேண்டும்.
சமூக ஊடக பிரபலங்களின் விளம்பரங்களை நம்பி கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை இழந்து வரும் செய்திகளை நாம் இப்பொழுது அடிக்கடி பார்க்க முடிகிறது. அதனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications