இந்தியாவில் டிஜிட்டல் சேவை எண்ணிக்கையும், வர்த்தகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மத்திய அரசு ஈ-பார்மஸி வர்த்தகத்தை மொத்தமாக தடை செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இந்தியா முழுவதும் இயங்கி வரும் டாடா 1எம்ஜி, நெட்மெட்ஸ் போன்ற பல முன்னணி ஈபார்மஸி சேவை நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதில் விதிமுறை மீறல்கள் இருப்பதால் இந்த தடை உத்தரவு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய சுகாதார அமைச்சகம் இப்பிரிவு வர்த்தகம் குறித்து விரைவில் முடிவு எடுக்க உள்ளது.
ஈபார்மஸி சேவை
ஈபார்மஸி சேவை நிறுவனங்கள் மீது மத்திய சுகாதார துறை அமைச்சகம் புதிய ஒழுங்குமுறை மற்றும் கடுமையான நடவடிக்கையை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதில் டேட்டா ப்ரைவசி, மோசடிகள், அடிப்படை இல்லாமல் மருந்து விற்பனை செய்வது ஆகிய பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.
ஒழுங்குமுறை
இதனால் ஈபார்மஸி சேவை வர்த்தகத்தை ஒழுங்குமுறைப்படுத்த முயற்சி செய்கிறது, இதேவேளையில் மொத்தமாக தடை செய்யவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது திருத்தப்பட்ட புதிய மருந்து, மருத்துவ கருவிகள் மற்றும் காஸ்மெட்டிக்ஸ் மசோதா 2023 அமைச்சகங்களின் ஆலோசனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு
இந்த ஆலோசனைக்கு பின்பு மத்திய அரசு ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை ரெகுலேட் செய்யவோ, கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ வாய்ப்புகள் உள்ளதாக பிடிஐ செய்திகள் கூறுகிறது. மேலும் தற்போது இந்தியாவில் நடைமுறையில் உள்ள Drugs and Cosmetics Act of 1940 சட்டத்தை புதிய மருந்து, மருத்துவ கருவிகள் மற்றும் காஸ்மெட்டிக்ஸ் மசோதா 2023 மாற்றும். இந்த மசோதா கீழ் ஈபார்மசி சேவை வழங்க தனிப்பட்ட அனுமதியை வாங்க வேண்டும்.
ஈபார்மஸி செயலிகள்
மத்திய அரசின் தற்போதைய முக்கியமான இலக்கு குறிக்கோள் இந்தியாவின் ஈபார்மஸி துறையை ஓழுங்குமுறைப்படுத்த வேண்டியது தான். ஈபார்மஸி செயலிகள் பகுதி வாரியாக யார் எந்த மருந்துகளை வாங்குகிறார்கள் என்ற தகவலை திரட்டி வைத்துள்ளது. இது நோயாளியின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது.
பாதுகாப்பு மற்றும் தரம்
ஈபார்மஸி துறையை ஒழுங்குமுறைப்படுத்த போதுமான சட்ட விதிமுறைகள், கட்டமைப்புகள் இல்லாத நிலையில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து கேள்வி எழுகிறது. இதனால் மத்திய அரசு ஈபார்மஸி துறையை ஓழுங்குமுறைப்படுத்த அல்லது தடை செய்ய திட்டமிட்டு உள்ளது.
முன்னணி நிறுவனங்கள்..!
இந்தியாவில் தற்போது டாடா 1எம்ஜி, அமேசான், பிளிப்கார்ட், நெட்மெட்ஸ், மெடிபட்டி, ப்ரேக்டோ, அப்போலோ ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்கிறது. இந்த நிலையில் அடுத்த சில மாதங்களில் ஆன்லைன் பார்மஸி-யின் எதிர்காலம் என்னவென தெரிந்துவிடும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications