பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் நேஷ்னல் பென்சன் திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, பழைய பென்சன் திட்டத்தில் கிடைத்தபடியே, அடிப்படை சம்பளத்தில் 50 சதவீத தொகைக்கு இணையாக ஓய்வூதியம் அளிக்கும் வகையில் மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்படி மோடி தலைமையிலான மத்திய அரசு நேஷ்னல் பென்சன் திட்டத்தில் சில முக்கியமான மாற்றங்களை செய்து, அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது பெற்ற கடைசி சம்பளத்தில் 40 முதல் 45 சதவீத குறைந்தபட்ச தொகையை ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என முயற்சியில் இறங்கியுள்ளது.

அனைத்து மாத சம்பளக்காரர்களும் கவனிக்க வேண்டியது என்னவென்றால் மோடி அரசு செய்யும் இந்த மாற்றங்கள் அரசு ஊழியர்களுக்கானது மட்டுமே, தனியார் ஊழியர்களுக்கு இந்த மாற்றங்கள் எதிரொலிக்காது. மேலும் ஓய்வூதிய தொகையை அதிகரிக்க வேண்டுமாயின் சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீட்டில் மாற்றங்கள் செய்வது மூலம் கூடுதல் பென்சன் தொகை அளிக்கப்பட கூடும்.
மத்திய அரசு தற்போது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பென்சன் திட்டத்தை ஆய்வு செய்ய தனி குழுவை அமைத்தது. இந்த குழுவின் வாயிலாக பரிந்துரைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் பல மாநிலங்கள் பழைய பென்சன் திட்டத்திற்கு செல்லும் வேளையில் மோடி அரசு, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில் பெரும் மாற்றத்திற்கு பின் 2004ல் கொண்டு வரப்பட்ட பென்சன் திட்டத்தை மறுஆய்வு செய்ய உள்ளது.
தற்போது நடைமுறையில் இருக்கும் நேஷ்னல் பென்சன் திட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் கட்டாயம் தங்களுடைய சம்பளத்தில் முதலீடு செய்ய வேண்டும், இந்த முதலீட்டின் அடிப்படையில் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கார்பஸ் அளவுகள் மாறும்.
உதாரணமாக அரசு ஊழியர்கள் நேஷ்னல் பென்சன் திட்டத்தில் குறைந்தபட்சம் தங்களுடைய அடிப்படை சம்பளத்தில் 14 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும், நிறுவனங்கள் கூடுதலாக 14 சதவீதம் முதலீடு செய்யும். இதேவே தனியார் ஊழியர்களை பொருத்தவரையில் குறைந்தபட்சம் தங்களுடைய அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும், நிறுவனங்கள் அதிகப்படியாக 10 சதவீதம் வரையில் முதலீடு செய்ய அனுமதி உண்டு.
ஆனால் இதுவே பழைய பென்சன் திட்டத்தில் ஊழியர்கள் தங்களுடைய பணி காலத்தில் சம்பளத்தில் எவ்விதமான தொகையையும் முதலீடு செய்ய தேவையில்லை, ஓய்வு பெற்ற பின்பு கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீத தொகை திருப்பி அளிக்கப்படும்.
இந்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நேஷ்னல் பென்சன் திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, வழக்கம் போல் ஊழியர்கள், நிறுவனங்கள் இணைந்து முதலீடு செய்து அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் போது பெற்ற கடைசி சம்பளத்தில் 40 முதல் 45 சதவீத குறைந்தபட்ச தொகையை ஓய்வூதியமாக வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 3வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் ஹிமாச்சல பிரதேசம், கர்நாடக தேர்தலில் பிஜேபி தோல்வியை எதிர்கொண்ட நிலையில் அடுத்த சில மாதத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ளது.
இதை தொடர்ந்து 2024ல் பொது தேர்தல் நடக்கும் வேளையில் மோடி அரசு மக்கள் மத்தியிலான நம்பிக்கையை பெற வேண்டும் என்ற திட்டத்துடன் பழைய பென்சன் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தை புதிய பென்சன் திட்டத்தில் அளிக்க வேண்டும் என மாற்றங்களை செய்யும் ஆலோசனையில் இறங்கியுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.


Click it and Unblock the Notifications