தக்காளி, வெங்காயம், மிளகாய், இஞ்சி ஆகியவற்றின் விலை உயர்வின் காரணமாக ஜூலை மாதம் நாட்டின் ரீடைல் பணவீக்கம் 7.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதம் 4.81 சதவீதமாக இருந்த ரீடைல் பணவீக்கம் உணவு பொருட்கள் விலை உயர்வால் தடாலடியாக உயர்ந்துள்ளது.
சில்லறை விலை பணவீக்க உயர்வுக்கு முக்கிய பங்கு எரிபொருள் விலையும் முக்கியமான காரணம் என்பதால், செம்படம்பர் மாதத்திற்குள் பணவீக்கத்தை 6 சதவீதத்திற்கு கீழ் அதாவது விலைவாசியை குறைக்க மத்திய திட்டமிட்டு இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.

ஏற்கனவே அரிசி விலையை கட்டுப்படுத்த பல்வேறு அரிசி வகைகளுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. தக்காளியை நேபாளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது, கோதுமையை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெட்ரோல் விலையை குறைக்க முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை குறைக்க வேண்மெனில் எளிதாக வரியை குறைத்து சரி செய்ய முடியும். ஆனால் இதற்கு பின்னால் பெரிய பிரச்சனை உள்ளது, மத்திய அரசி வரியை குறைத்தால் அரசுக்கான வரி வருமானம் குறைத்து நிதி பற்றாக்குறை அதிகரிக்கும். இது பட்ஜெட் இலக்குகளை அடைய முடியாமல் கூடுதல் கடன் பெறும் நிலைக்கு அரசை தள்ளும்.
இந்த நிலையில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை இலக்கை பாதிக்காமல், உணவு மற்றும் எரிபொருள் செலவில் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த, பல்வேறு அமைச்சகங்களின் பட்ஜெட் திட்டங்களில் இருந்து சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் வரையிலான தொகையை மறு ஒதுக்கீடு செய்வதற்கான திட்டத்தை அரசு அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் வாரங்களில் இதுக்குறித்து இறுதி முடிவை எடுக்க உள்ளார். இதில் பெட்ரோல் விற்பனை மீதான வரிகளை குறைப்பது மற்றும் சமையல் எண்ணெய் மற்றும் கோதுமை மீதான இறக்குமதி வரியை தளர்த்துவது ஆகியவை அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் நுகர்வோர் விலை நிலையை கட்டுப்படுத்த இதேபோன்ற பட்ஜெட் மறுஒதுக்கீட்டை இரண்டாவது முறையாக செய்யப்படுகிறது. இந்த 1 லட்சம் ரூபாய் நிதியை பயன்படுத்தி எரிபொருள் மீதான விலையை குறைக்கும் வகையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கலாம், அல்லது வரியை குறைந்து திரட்டப்பட்ட நிதியை முக்கிய பணிகள் அல்லது வருவாய் அளிக்கும் திட்டங்களுக்கு உட்செலுத்தலாம்.
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை குறைக்க ஏதுவான சூழல் நிறைந்துள்ளது. பெட்ரோல் விலை குறைக்கப்பட்டால் சாமானிய மக்களுக்கு பெரும் உதவியாக இருப்பது மட்டும் அல்லாமல் தேர்தல் எதிர்நோக்கும் மாநிலங்களில் மக்கள் நம்பிக்கையை பெற ஒரு வாய்ப்பாக மோடி அரசுக்கு இருக்கும்.
More From GoodReturns

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications