இந்தியாவில் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை மேம்படுத்தப் பெரிய அளவிலான மானியம் கொடுத்தது. இந்த மானியத்தின் மூலம் மக்கள் பெரும் தள்ளுபடி உடன் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி வந்தனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டுத் துவக்கத்தில் மத்திய அரசு எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு மானியத்தைக் குறைத்த நிலையில் தற்போது மொத்தமாக நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ள எலக்ட்ரிக் இருசக்கரங்களுக்கான மானியம் அடுத்த சில வாரத்தில் முடிய உள்ள வேளையில், மீண்டும் மானியத்தை அறிவிக்கும் திட்டத்தில் அரசு இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு இந்திய ஆட்டோமொபைல் துறைக்கான மானியத்தை FAME என்ற கொள்கையில் கீழ் அளித்து வரும் வேளையில், ஏற்கனவே மானியத்தை 2 முறை நீட்டித்த நிலையில் FAME III அதாவது 3வது கொள்கையை அறிவிக்க அரசு எவ்விதமான நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கவில்லை என டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இதேபோல் நிதியமைச்சகமும், பிற அமைப்புகளும் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான மானியத்தைத் தொடர்ந்து நீட்டிப்பதில் எவ்விதமான பலனும் இல்லை என நினைக்கிறது. இதன் வாயிலாக 3வது முறையாக மானியம் அளிக்கும் திட்டம் இல்லை எனத் தெரிகிறது.
மத்திய அரசு இந்த மானியத்தை வழங்க முக்கியமான காரணம் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பது தான், FAME I மற்றும் II ஆகிய திட்டங்கள் மூலம் இது சாத்தியப்படுத்தப்பட்டு உள்ளது. FAME II கொள்கை கீழ் சுமார் 10 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது மத்திய அரசு எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு மானியம் அளிக்காத பட்சத்தில் இதன் விலை அதிகளவில் உயர வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே மானியம் குறைக்கப்பட்ட போது மத்திய எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் விற்பனை குறைந்து திரும்பவும் மீண்டு வந்தது, இதேபோல் மீண்டும் நடக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் மத்திய அரசு தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் மானியத்தின் கீழ் உயர்தர எலக்ட்ரிக் கார்களின் உள்நாட்டு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் கவனம் செலுத்த உள்ளது. இதனால் FAME III கொள்கையில் டெஸ்லா, வின்பாஸ்ட் போன்ற நிறுவனங்கள் பெரிய அளவில் பலன்பெறும் எனத் தெரிகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications