7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியை (டிஏ) நான்கு சதவீதம் அதிகரித்து, தற்போதுள்ள 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக மத்திய அரசு அதிகரிக்க அதிகப்படியான வாய்ப்புள்ளது.

தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி அளவீட்டை, தொழிலாளர் பணியகம் ஒவ்வொரு மாதமும், தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI-IW) கணக்கிட்டு வெளியிட்டு வருகிறது.

தொழிலாளர் பணியகம் என்பது தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பிரிவாகும்.

சிபிஐ-ஐடபிள்யூ குறியீடு

சிபிஐ-ஐடபிள்யூ குறியீடு

இந்த நிலையில் அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பு, பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா பிடிஐ செய்தியாளர்களிடம் பேசுகையில் டிசம்பர் 2022க்கான சிபிஐ-ஐடபிள்யூ ஜனவரி 31, 2023 அன்று வெளியிடப்பட்டது. அகவிலைப்படி உயர்வு 4.23 சதவீதமாக உள்ளது. இதனால் DA அளவு 4 சதவீத புள்ளிகள் அதிகரித்து 42 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

செலவினத் துறை

செலவினத் துறை

நிதியமைச்சகத்தின் செலவினத் துறை அதன் வருவாய் தாக்கத்துடன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA உயர்த்துவதற்கான திட்டத்தை உருவாக்கி வருகிறது. விரைவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு முன்வைக்கும் என்று சிவ கோபால் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

38 சதவீத அகவிலைப்படி

38 சதவீத அகவிலைப்படி

தற்போது உயர்த்தப்படும் DA உயர்வு ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும். தற்போது ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 38 சதவீத அகவிலைப்படியைப் பெறுகின்றனர்.

அகவிலைப்படி அளவு கடைசியாகச் செப்டம்பர் 28, 2022 அன்று திருத்தம் செய்யப்பட்டது. இது ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வந்தது.

வருடத்திற்கு 2 முறை

வருடத்திற்கு 2 முறை


விலைவாசி உயர்வை ஈடுகட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA வழங்கப்படுகிறது. cost of living ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அதிகரிக்கிறது மற்றும் CPI-IW மூலம் அதைக் கணக்கிட்டு அறிவிக்கப்படுகிறது. இந்தக் கொடுப்பனவு ஒரு வருடத்திற்கு இரண்டு முறை திருத்தப்படுகிறது.

18 மாத நிலுவை

18 மாத நிலுவை

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் உயர்வுக்கு மத்தியில், அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி (டிஏ) நிலுவைத் தொகையை எப்போது மத்திய அரசு வழங்கும் என்பது தொடர்பான கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

DA நிலுவைத் தொகை அளவு

DA நிலுவைத் தொகை அளவு

மத்திய அரசு ஊழியர்களின் தரவுகள் படி லெவல் 3 பிரிவு ஊழியர்களுக்கான 18 மாத DA நிலுவைத் தொகை அளவு 11,880 ரூபாயில் இருந்து 37,554 ரூபாயாக இருக்கும். இதுவே லெவல் 14 பிரிவு ஊழியர்களுக்கான 18 மாத DA நிலுவைத் தொகை அளவு 1,44,200 ரூபாயில் இருந்து 2,18,200 ரூபாயாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+