இந்திய அரசு, நாட்டில் இருக்கும் அனைத்து வாகன உரிமையாளர்களும் கட்டாயமாக மூன்றாம் தரப்பு வாகன காப்பீட்டை பெற வேண்டும் என்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய நிதியமைச்சகம், இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களும் காப்பீட்டு பாதுகாப்பை பெறுவதை உறுதி செய்யும் வழிகளை ஆராயும்படி மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது கார், பைக் வைத்துள்ள அனைவரும் மூன்றாம் தரப்பு வாகன காப்பீட்டை கட்டாயம் வாங்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. இதை செயல்படுத்த பெட்ரோல்/டீசல் வாங்குவது, ஃபாஸ்டேக் பெறுவது, ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்வது மற்றும் ஓட்டுநர் உரிமம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்களை புதுப்பித்தல் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த மூன்றாம் தரப்பு வாகன காப்பீட்டு சான்றிதழை கட்டாய ஆவணமாக மாற்றும் முறையை கொண்டு வர சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தற்போது அதிகளவிலான வாகனங்கள் மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாமல் இயக்கப்படுகின்றன. காப்பீடு செய்யப்பட்ட வாகனத்தால் ஏற்படும் விபத்துகளால் பாதிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினருக்கு (தனிநபர்கள் அல்லது சொத்து) நிதி உதவி வழங்குவதற்கு இந்த காப்பீடு மிகவும் முக்கியமானது.
1988 ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் மூன்றாம் தரப்பு காப்பீட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இக்காப்பீடு இல்லாமல் வாகனங்களை இயக்கி விபத்து செய்வோருக்கு சிறை தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை விதித்தாலும், இன்னும் பெரும்பாலான மக்கள் தங்களுடைய வாகனங்களுக்கு இந்த காப்பீட்டை பெறாமலேயே உள்ளனர்.
இதேவேளையில் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) இதுதொடர்பாக முக்கியமான தரவுகளை வெளியிட்டுள்ள உள்ளது. 2024 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள சுமார் 350-400 மில்லியன் வாகனங்களில் சுமார் 50% மட்டுமே மூன்றாம் தரப்பு காப்பீடுடன் உள்ளதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications