இந்தியா ஒரு கையில் கொரோனா, ஒமிக்ரான், லாக்டவுன், பொருளாதாரச் சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு உடன் இருக்கும் வேளையில் மறு கையில் 2025ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவுகள் உடன் இயங்கி வருகிறது. இந்த இரண்டையும் ஓரே நேரத்தில் அடைவது என்பது மிகவும் சவாலான விஷயம் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று.
Recommended Video
இந்த நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் அறிக்கை இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து 5 டிரில்லியன் டாலர் இலக்கை அடைய மிகவும் முக்கியமானது.
இந்த நிலையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு கவனிக்க வேண்டிய மிக முக்கியமான 6 விஷயங்கள் இதுதான்.
வீட்டு கடன் வரிச் சலுகை
இந்தியாவில் தற்போது தொழிற்துறை வளர்ச்சி சிறப்பாக இருக்கும் நிலையில் அனைத்துத் தரப்பு மக்களும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கின்றனர். மக்களின் இந்த மன மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் பலன் தரும், ஆனால் இதை மத்திய அரசு பெரிய அளவில் ஊக்குவிக்க வேண்டும்.
குறிப்பாக வீட்டுக் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்துவதில் தற்போது 1.5 லட்சம் ரூபாய் வரையில் மட்டும் வரிச் சலுகை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதை 50,000 ரூபாய்க் கூடுதலாக அதிகரிக்க வேண்டும்.
முதலீடு
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு அதிகப்படியான முதலீடுகள் வேண்டும், இந்த முதலீட்டை அன்னிய முதலீட்டு வாயிலாகவோ அல்லது உள்நாட்டு சந்தை முதலீட்டுகள் வாயிலாகப் பெறலாம். இந்த நிலையில் ஒரு KYC மூலம் அனைத்து முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்படுவது மட்டும் அல்லாமல் வரிச் சேமிப்பு மியூச்சவல் பண்ட் சேவை பிரிவில் தற்போது அளிக்கப்படும் 1.5 லட்சம் ரூபாய் முதலீட்டு அளவீட்டை 2 லட்சம் வரையில் அதிகரிக்க வேண்டும்.
பர்சனல் பைனான்ஸ்
இந்தியாவில் வெறும் 24 சதவீத மக்களுக்குத் தான் நிதியியல் கல்வியறிவு உள்ளது. இந்த நிலையை வேகமாக மாற்ற வேண்டும், இதற்காகப் பள்ளி கல்வியிலேயே முதலீடு, பணத்தைச் சேமிப்பது, சொத்துக்களை உருவாக்குவது, வரிச் சேமிப்பு, வருமான வரி, போன்ற பர்சனல் பைனான்ஸ் குறித்த பாடங்களைக் கொண்டு வர வேண்டும்.
பின்டெக் நிறுவனங்கள்
இந்தியாவில் தற்போது பின்டெக் நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக வங்கி மற்றும் நிதி சேவை பெற முடியாத மக்களுக்குக் கடன் சேவைகளை அளித்து வருகிறது. இதனால் பின்டெக் மற்றும் டிஜிட்டல் கடன் சேவை நிறுவனங்களை ஒழுங்கு முறைப்படுத்தவும், தொடர் கண்காணிப்பில் வைக்கவும் புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
தங்க பத்திரம்
இந்தியாவில் தங்கம் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுக் கணிசமான முதலீட்டை மட்டுமே பெற்று உள்ளது. இதற்கு முக்கியமான லாக்இன் காலம் தான், தங்கம் விலை பெரிய அளவில் மாறி வரும் நிலையில் மத்திய அரசின் தங்க முதலீட்டுப் பத்திரத்திற்கு 5 ஆண்டு லாக்இன் காலம் என்பது மிகவும் அதிகம். இதை 3 ஆண்டுக் காலமாகக் குறைக்க வேண்டும்.
விலைவாசி
இந்தியாவில் தற்போது விவசாயப் பொருட்கள் முதல் உற்பத்தி பொருட்கள் வரையில் அனைத்தும் அதிகப்படியான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக உணவு பொருட்களின் விலையில் இந்தியாவில் முழுவதும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதை விரைவாகக் குறைக்க மத்திய அரசு வழிவகைச் செய்ய வேண்டும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications