மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை இயற்கை எரிவாயுவின் விலை நிர்ணயம் செய்வதற்கான புதிய பார்முலா-வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. சிஎன்ஜி மற்றும் குழாய் வழியாக சப்ளை செய்யப்படும் சமையல் எரிவாயுவின் ரன்வே விலையை கட்டுப்படுத்த உச்சவரம்பு விலையை நிர்ணயம் செய்ய புதிய கணக்கீட்டு முறையை ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா, கனடா மற்றும் ரஷ்யா போன்ற உபரி நாடுகளில் எரிவாயு விலை அடிப்படையில் நிர்ணயம் செய்வதற்குப் பதிலாக, APM எரிவாயு என அழைக்கப்படும் பழைய எண்ணெய் வயல்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு விலையை இப்போது கச்சா எண்ணெய் விலையுடன் இன்டெக்ஸ் செய்யப்படும் என்று மத்திய ஐ&பி அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஏப்ரல் 1 முதல், இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்-யின் விலையில் 10 சதவீதமாக ஏபிஎம் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்படும். இந்தியன் பேஸ்கட் கச்சா எண்ணெய் என்பது இந்திய அரசு பல நாடுகள் உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு தள்ளுபடி விலையிலும், சலுகை உடனும் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இப்படி இந்திய வாங்கும் எண்ணெய் தான் இந்தியன் பேஸ்கட் ஆப் க்ரூட் ஆயில்.
இந்த மாற்றத்தின் மூலம் எவ்வாறாயினும், தற்போதைய எரிவாயு விலை mmBtu ஒன்றுக்கு 8.57 டாலராக இருக்கும் வேளையில், புதிய விலை நிர்ணயம் செய்யும் பார்முலா வாயிலாக ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டுக்கு 6.5 டாலராக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் எரிவாயு-க்கு ஒரு mmBtu க்கு USD 4 என்ற குறைவான விலை அளவீடும் விதிக்கப்பட்டு உள்ளது.
இது மட்டும் அல்லாமல் தற்போதைய நடைமுறைக்கு பதிலாக ஆண்டுக்கு இருமுறை திருத்தம் செய்வதற்கு பதிலாக ஒவ்வொரு மாதமும் கட்டணங்கள் முடிவு செய்யப்படும் எனவும் மத்திய ஐ&பி அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் எப்படி தினமும் பெட்ரோல், டீசல் விலை மாறுகிறதோ அதேபோல் தற்போது ஒவ்வொரு மாதமும் விலை திருத்தம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications