இந்தியா பொருளாதாரத்தின் மதிப்பு 5 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தொட வேண்டும் என்பது மோடி அரசின் மிகப்பெரிய கனவு. இந்தக் கனவை அடைய தற்போது இருக்கும் வர்த்தகக் கட்டமைப்புக் கட்டாயம் போதாது என்பதை உணர்ந்த மத்திய அரசு கடந்த சில வருடங்களாக உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் அதிகப்படியான கவனத்தையும், திட்டங்களையும் அறிவித்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தயாரிப்பு பணிகளை முழுமையாக முடித்துவிட்ட விட நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக் காத்திருக்கிறது.
இந்நிலையில் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மேலும் இத்திட்டம் பட்ஜெட் அறிக்கையிலும் வெளியாக அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
700 ஏற்றுமதி மாவட்டங்கள்
மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் இந்தியாவில் ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக நாட்டில் சுமார் 700 மாவட்டத்தை ஏற்றுமதி ஹப் ஆக மேம்படுத்தும் 10,000 கோடி ரூபாய் திட்டத்தை முன்வைத்துள்ளது.
பட்ஜெட் அறிக்கை
மேலும் இத்திட்டம் மத்திய அரசு வெளியிட உள்ள வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெறும் என்றும், இதற்காக அறிவிப்பு பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10,000 கோடி ரூபாய் முதலீடு
இந்தியாவில் 700 மாவட்டங்களை ஏற்றுமதி தளமாக மாற்றம் திட்டத்திற்கு மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ள நிலையில் கூடுதலாகத் தேவைப்படும் நிதியை மாநில அரசுகளின் உதவியுடன் இத்திட்டம் செயல்படும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்துள்ளார்.
சரக்கு மற்றும் சேவை
இத்திட்டத்தின் கீழ் பொருட்கள், சேவை ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் திறன் கொண்ட மாநிலங்களை, நாடு முழுவதும் ஆய்வு செய்து கண்டறியப்படும். இதில் விவசாய உற்பத்தியில் துவங்கி பொம்பை, கைவினை பொருட்கள் என ஏற்றுமதிக்கு ஏற்ற அனைத்து சரக்கு மற்றும் சேவைகள் கண்டறியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3 முதல் 5 வருடம்
மேலும் மத்திய அரசு அடுத்த 3 முதல் 5 வருடத்தில் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தை இரண்டு இலக்கு வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர இலக்கை அடைய 500 மாவட்டங்களை முதல்கட்டமாகத் தேர்வு செய்ய உள்ளதாகத் தெரிகிறது.
ஆடை ஏற்றுமதி
இந்தியாவின் ஆடை ஏற்றுமதி டிசம்பர் மாதம் மட்டும் சுமார் 37.81 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 2021 முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 301.38 பில்லியன் டாலர் அளவிற்கு ஆடைகள் வெளிநாட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
உற்பத்தி, வர்த்தகம், வேலைவாய்ப்பு, ஏற்றுமதி
700 மாவட்டங்களை ஏற்றுமதி தளமாகக் கண்டறிந்து நேரடியாக ஏற்றுமதி வர்த்தகச் சந்தையில் மக்கள் இணைவதன் மூலம் நாட்டின் உற்பத்தி, வர்த்தகம், வேலைவாய்ப்பு, ஏற்றுமதி ஆகிய அனைத்து பிரிவுகளிலும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்ய முடியும்.
சிறிய நகரங்கள்
அனைத்திற்கும் மேலாகப் பெரு நகரங்களைத் தாண்டி சிறிய நகரங்களும் அதிகளவிலான வர்த்தகத்தை இத்திட்டம் மூலம் சாத்தியப்படும் என்பது தான் முக்கியச் சிறப்பு. மத்திய மாநில அரசுள் இத்திட்டத்தை எப்படிக் கையாளுகிறது என்பதை இனி தான் பார்க்க வேண்டும்.
மத்திய அரசு
மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் இத்திட்டத்தைத் தற்போது சமர்ப்பித்துள்ளது, இத்திட்டம் ஆய்வு செய்யப்பட்டு, ஒப்புதல் பெற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்பே நடைமுறைக்கு வரும். ஆனால் இதற்கான அறிவிப்புப் பட்ஜெட் அறிக்கையில் வந்தால் கட்டாயம் இதுதான் பட்ஜெட் 2022ன் முக்கிய அறிவிப்பாக இருக்கும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications