இந்தியாவில் தற்போது அதிகப்படியான வேலைவாய்ப்புகளையும், ஏற்றுமதி வர்த்ததகத்தையும் உருவாக்கும் ஒரு துறையென்றால் அது எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு துறை தான். ஆனால் இத்துறையில் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் சீனா-வின் தொழில்நுட்பம் மற்றும் உதவி தேவை. இத்தகைய சூழ்நிலையில் இருநாடுகள் மத்தியிலான எல்லை பிரச்சனை காரணமாக இந்தியா சீன முதலீடுகளை தடுத்து வந்தது, தற்போது சீன முக்கியமான தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி பொருட்களை அளிப்பதை குறைத்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி தொழில்துறையில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பிரபலமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான டிக்ஸன் டெக்னாலஜிஸ் நிறுவனம் சீனாவின் முக்கிய எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர் லாங்சியர் இன்டெலிஜன்ஸ் (Longcheer Intelligence) உடனான கூட்டணி ஒப்பந்தத்திற்கு மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய அரசு ஆட்டோமொபைல் துறையில் SAIC மற்றம் JSW குழுமத்தியில் மத்தியில் MG மோட்டார் நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்து போலவே தற்போது எலக்ட்ரானிக்ஸ் துறையில் சீனா நிறுவனம் உடனான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் படி இக்கூட்டணி நிறுவனத்தில் டிக்ஸன் 74% பங்குகளை வைத்திருக்கும், அதேபோல் லாங்சியர் 26% பங்குகளை பெறும். இந்த முடிவு இந்திய எலக்ட்ரானிக்ஸ் தொழிலுக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளதாகவும், பிற இந்திய நிறுவனங்களுக்கு இதேபோன்ற கூட்டணியை அமைக்க முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்த கிரீன் சிக்னல் மூலம் பிற இந்திய நிறுவனங்களின் சீன கூட்டு முயற்சி திட்டங்களை செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிக்ஸன்-லாங்சியர் ஒப்பந்தம் வெற்றியடைந்ததால், இந்திய எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு இது ஜாக்பாட் ஆக இருக்கும்.
தற்போது வெளியாகியுள்ள தகவல் படி ஈபேக் டியூரபிள், பி.ஜி. எலக்ட்ரோபிளாஸ்ட், அம்பர் எண்டர்பிரைசஸ் மற்றும் கார்பன் மொபைல் போன்ற நிறுவனங்கள் சீன உற்பத்தி நிறுவனங்கள் உடன் கூட்டணி ஒப்பந்தங்களை செய்ய முடிவு செய்துள்ளன.
இந்த கூட்டணிகள் மூலம் துவங்கப்படும் நிறுவனத்தில் இந்திய நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக, இருக்கும் அதேபோல் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் குறைவாக இருக்கும் வகையில் பங்கு பரிவுகள் நடக்கிறது. இக்கூட்டணி மூலம் தேக்கம் அடைந்துள்ள உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்தவும், சர்வதேச சந்தையில் போட்டியிடவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிக்ஸன் மற்றும் லாங்சியர் இடையிலான இந்த கூட்டு முயற்சி பல புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இந்திய உற்பத்தி சந்தையில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் வாட்ச்கள், AI பிசிகள், ஆட்டோமோட்டிவ் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மருத்துவ சாதனங்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தியில் கவனம் செலுத்தும்.
லாங்சியர் தற்போது விவோ, சியோமி, ஓப்போ மற்றும் சாம்சங் போன்ற பிரபல நிறுவனங்களுக்கு பொருட்கள் தயாரிக்கிறது, இதன் அனுபவம் டிக்ஸனுக்கு பெரும் பலமாக அமையும்.

தற்போது நடைமுறையில் இருக்கும் விதிமுறைப்படி இந்தியாவில் சீன நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள, பிரஸ் நோட் 3 (PN3) விதிமுறைகளின் கீழ் பல அமைச்சகங்களின் அனுமதி தேவைப்படுகிறது. இந்த விதிகள் 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்தியா-சீன எல்லை பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட்டன.
ஆனால், டிக்ஸன்-லாங்சியர் ஒப்பந்தத்திற்கு அனுமதி அளித்தது, மோடி அரசு சீன நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. இது இந்திய எலக்ட்ரானிக்ஸ் தொழிலுக்கு தேவையான தொழில்நுட்ப பரிமாற்றத்தை எளிதாக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications