டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுடன் நட்பு பாராட்டினாலும் , இந்திய பொருட்களுக்கு போட்டி வரி விதிப்பதில் திட்டவட்டமாக இருக்கிறார். இந்தியா அமெரிக்க பொருள்களுக்கு அதிகபட்ச வரியை விதிப்பதாக அவர் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் போட்டி வரி விதிப்போம் என அவர் பதவியேற்றதிலிருந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
இந்த சூழலில் தான் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதாவது இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு எப்படி அதிகபட்ச வரியை விதிக்கிறதோ அதற்கு போட்டியான தொகை அமெரிக்காவில் வரியாக விதிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்றது முதலே டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அதிகப்படுத்தி வர்த்தகப் போரை தொடங்கியுள்ளார். ஏப்ரல் மாதம் முதல் அது மேலும் தீவிரமடைய இருக்கிறது. இதனால் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு என்ன ஆகுமோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த சூழலில் டிரம்ப் நிர்வாகத்தை சமாதானப்படுத்தும் முயற்சியாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட சில அமெரிக்க பொருளுக்கு இதுநாள் வரை விதிக்கப்பட்டு வந்து இறக்குமதி வரியை குறைப்பதற்கு அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான செய்தியை எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு என்னென்ன பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை ஆய்வு செய்து வரும் அரசு இதில் நான்கிலிருந்து ஐந்து பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மின்னணு சாதனங்கள் ,ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் , விமானம் , பாராசூட் மற்றும் கப்பல்கள் உள்ளிட்டவைக்கு இந்தியா தற்போது 7.5 முதல் 10% வரை இறக்குமதி வரி விதிக்கிறது.
இந்த பட்டியலில் சில பொருட்கள் மீதான வரியை குறைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர டிரம்ப் நிர்வாகத்தை சமாதானப்படுத்தவும் இரு நாட்டு வர்த்தக உறவை மேம்படுத்தவும் பல்வேறு வழிமுறைகளை அரசு ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தான் மத்திய அரசு போர்பன் விஸ்கி மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தது.
மேலும் கூகுள் ,பேஸ்புக் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் டிஜிட்டல் விளம்பரம் வழங்கி அதன் மூலம் ஈட்டும் வருமானத்திற்கு விதிக்கப்பட்டு வந்த கூகுள் வரி எனப்படும் வரியையும் நீக்க முடிவு செய்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications