இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கை அடைய அனைத்து முன்னணி பிராண்டுகளும் இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை அமைக்க வேண்டும் அல்லது இந்தியாவில் கூட்டணி அமைத்து உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்ற நெருக்கடியை பல்வேறு சலுகைகள் உடன் மத்திய அரசு முன் வைக்கிறது.
இதன் வாயிலாக மோடி தலைமையிலான மத்திய அரசு டெலிகாம் கருவிகள், உபகரணங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தியாவில் அதன் உற்பத்தியை துவங்க வேண்டும் என்பதற்காகவும் பகுதி பகுதியாக வரியை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.

இதன் மூலம் இந்தியாவை உலகளாவிய டெலிகாம் கருவிகளின் உற்பத்தி தளமாக மாற்றும் முயற்சியில் மாபெரும் வெற்றியை காண உள்ளது மத்திய அரசு. இந்த நிலையில் மத்திய டெலிகாம் துறை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் டெலிகாம் கருவிகளுக்கு 10 சதவீத இறக்குமதி வரியும், அக்டோபர் மாதம் முதல் 15 சதவீத வரியும் பேக் செய்யப்பட்ட பொருட்களுக்கு விதிக்கும் திட்டத்தை ஆய்வு செய்ய துவங்கியுள்ளது.
இந்த வரி உயர்வால் இந்தியாவில் டெலிகாம் ஆண்டனா, வைபை ஸ்விச், பிளாஸ்டி மெட்டல் ஹவுசிங் பொருட்கள், வயர் மற்றும் கேபிள், யூஎஸ்பி போர்ட்ஸ் மற்றும் கனெக்டர்ஸ், பவர் அடாப்டர்ஸ் மற்றும் பிற எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் பொருட்கள் ஆகியவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படலாம்.
மேலும் இதன் மீது இறக்குமதி வரி விதிக்கும் போதும் இறக்குமதி குறைக்கப்பட்டு உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் திட்டத்தை நிறுவனங்கள் கையில் எடுக்கும். இந்தியாவில் டெலிகாம் கருவிகளுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, 2ஜி சேவையில் இருந்து மக்கள் தற்போது 4ஜி மற்றும் 5ஜி சேவைக்கு மாறி வரும் காரணத்தால் டிமாண்ட் அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள திட்டமிடும் மத்திய அரசு அதிகப்படியான வரியை விதித்து உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. வர்த்தக ரீதியிலும் உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்கள் விலை குறைவாக இருக்கும் காரணத்தால் இதன் வர்த்தகம் அதிகமாகும்.


Click it and Unblock the Notifications