எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க ஆசையா..? முதல்ல இதை படிங்க.. மத்திய அரசு முடிவால் விலை உயர்வு..!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மோகம் மக்கள் மத்தியில் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது, இதற்கு முக்கியமான காரணம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் அளிக்கும் மானியம், சலுகைகள் மற்றும் பெட்ரோல் விலையை ஒப்பிடும் போது மின்சார கட்டணம் குறைவு என்பது தான்.

ஆனால் மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனகங்களை வாங்க ஊக்குவித்தது மானியங்கள் வாயிலாக தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மானியத்தை குறைக்க திட்டமிட்டு வருகிறது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க ஆசையா..? முதல்ல இதை படிங்க.. மத்திய அரசு முடிவால் விலை உயர்வு..!

இது எலக்ட்ரிக் வாகன பிரியர்களுக்கும், புதிதாக எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிடுவோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இரு சக்கர எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத்தை தற்போதைய 40 சதவீத அளவில் இருந்து தடாலடியாக 15 சதவீதமாக குறைக்க உள்ளது. இது உடனடியாக அமலாக்கம் செய்யப்படாது என்பதையும்.. அது ஏன் என்பதையும் மக்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகம் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கான மானியத்தை தற்போதைய 40 சதவீத அளவில் இருந்து 15 சதவீதமாக குறைக்கும் பரிந்துரையை உயர்மட்ட அமைச்சர்கள் குழுவிற்கு சமர்ப்பித்துள்ளது. இந்த பரிந்துரை தற்போதைய சந்தை நிலவரத்தை ஆய்வு செய்து சரியாக இருக்கும் பட்சத்தில் அமலாக்கம் செய்யப்படும், இல்லையெனில் மொத்தமாக கைவிடப்படும்.

மானியத்தை குறைப்பதன் மூலம் மத்திய அரசு தற்போது இருக்கும் நிதி இருப்பில் இன்னும் அதிகமான வாகனங்களுக்கும், மக்களுக்கும் உதவ முடியும் என அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் 3 சக்கர எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ஒரு பகுதி பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதை இரு சக்கர வாகனங்களுக்கு பெரிய அளவில் பயன்படுத்த முடியும் எனவும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

மத்திய அரசு FAME INDIA திட்டத்தின் கீழ் 10000 கோடி ரூபாயை மானியத்திற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரையில் சுமார் 5.63 லட்சம் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு உள்ளது. மானியத்தை குறைப்பதன் மூலம் 2024 ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் எலக்ட்ரிக் இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களுக்கு மானியம் அளிக்க முடியும்.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க ஆசையா..? முதல்ல இதை படிங்க.. மத்திய அரசு முடிவால் விலை உயர்வு..!

மானிய அளவீட்டை குறைப்பதன் மூலம் பலன் பெறுவோரின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கும். இந்த அனைத்து விஷயங்களை தாண்டி மானியத்தை குறைத்தால் கட்டாயம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை உயரும், ஆனால் சந்தை போட்டி காரணமாக விலையை உயர்வை கட்டுப்படுத்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தை குறைத்து தற்போதைய விலைக்கே விற்பனை செய்யவும் வாய்ப்பு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+