மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் மற்றும் நித்தி அயோக் இணைந்து வெளியிட்ட தேசிய பணமாக்கல் திட்டத்தில் அரசுக்குச் சொந்தமாகச் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்பனை (தற்காலிகமாக) செய்து, நாட்டின் வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்த நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
2022 முதல் 2025 வரையிலான 4 ஆண்டுக் காலத்தில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களில் எந்தெந்த சொத்துக்களை விற்பனை செய்ய உள்ளது என்பதையும், அதை எந்தெந்த திட்டங்களுக்குச் செலவு செய்ய உள்ளது என்றும் இன்று வெளியிட்ட தேசிய பணமாக்கல் திட்டத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
3 முக்கியத் துறைகள்
இன்று வெளியிடப்பட்டு உள்ள தேசிய பணமாக்கல் திட்டத்தில் நெடுஞ்சாலை, ரயில்வே, மின்சாரம் ஆகிய 3 துறைகளின் சொத்துக்கள் தான் அதிகளவில் விற்பனை செய்து, அதிகமாக நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
முக்கியச் சொத்துகள் விற்பனை
இதன் படி 15 ரயில்வே நிலையங்கள், 25 விமான நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் இருக்கும் அரசு பங்குகள், 160 நிலக்கரி சுரங்கங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக நித்தி அயோக் தலைவர் அமிதாப் கன்ட் தெரிவித்துள்ளார்.
88,000 கோடி ரூபாய்
தற்போது அதிகளவிலான பணப்புழக்கம் உள்ளது, சரியான திட்டமிட உடன் உள்கட்டுமான திட்டத்தை நிறைவேற்றினால் கட்டாயம் நல்ல பலன் கிடைக்கும். நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 88,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மாநில அரசுக்கு கடன்
இந்த நிதி திரட்டல் திட்டத்தின் வாயிலாக மாநில அரசுக்கு தலா 5000 கோடி ரூபாய் அளவிலான தொகையை 50 வருடம் வட்டியில்லா கடனான மத்திய அரசு அளிக்கப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். பட்ஜெட் அறிக்கையில் நடப்பு நிதியாண்டு முதல் இக்கடன் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் நிதி பகிர்வு
இதேபோல் ஒரு மாநில அரசு, பொதுத்துறை நிறுவனத்தை விற்பனை செய்தால் மத்திய அரசு 100 சதவீத தொகையை நிதியுதவியாக வழங்கும், பொதுத்துறை நிறுவன சொத்துக்களை விற்பனை செய்தால் மத்திய அரசு 33 சதவீத தொகையை அளிக்கும். இதுவே மாநில அரசு பொதுத்துறை நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு முதலீட்டை திரட்டினால் மத்திய அரசு 50 சதவீத தொகையை அளிக்கும் என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
சொத்துக்களின் உரிமை
தற்போது பணமாக்கும் அனைத்து அரசு சொத்துக்களின் உரிமையும் அரசின் கையில் தான் இருக்கும், குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு இந்தச் சொத்துகள் திரும்பவும் அரசுக்கு கொடுக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் தனியார் பங்கீடு இதில் அதிகரிக்கும்.
உள்கட்டமைப்புத் திட்டம்
இந்தச் சொத்து விற்பனையில் கிடைக்கும் வருமானத்தை அரசு நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டத்திற்குப் பயன்படுத்தும் எனத் தேசிய பணமாக்கல் திட்டம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
துறை வாரியான அளவீடுகள்
தற்போது வெளியிட்டுள்ள திட்டத்தின் படி எந்தத் துறையில் எவ்வளவு மதிப்பிலான சொத்துகளை அடுத்த 4 வருடத்தில் பணமாக்க மத்திய அரசு தேர்வு செய்துள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.
- சாலை - 1,60,200 கோடி ரூபாய்
- ரயில்வே - 1,52,496 கோடி ரூபாய்
- மின்சாரப் பரிமாற்றம் - 45,200 கோடி ரூபாய்
- மின்சார உற்பத்தி - 39,832 கோடி ரூபாய்
- இயற்கை எரிவாயு பைப்லைன் - 24,462 கோடி ரூபாய்
- பிராடெக்ட் பைப்லைன் - 22,504 கோடி ரூபாய்
- டெலிகாம் - 35,100 கோடி ரூபாய்
- கிடங்கு - 28,900 கோடி ரூபாய்
- சுரங்கம் - 28,747 கோடி ரூபாய்
- விமானப் போக்குவரத்து - 20,782 கோடி ரூபாய்
- துறைமுகம் - 12,828 கோடி ரூபாய்
- ஸ்டேடியம் - 11,450 கோடி ரூபாய்
- நகர ரியல் எஸ்டேட் - 15,000 கோடி ரூபாய்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்தத் தேசிய பணமாக்கல் திட்டம் என்பது அரசு சொத்துகள் மீது தனியார் நிறுவனங்கள் மூலம் முதலீட்டை ஈர்ப்பது மட்டுமே. இதில் வரும் முதலீட்டின் மூலம் புதிய அரசு திட்டங்களையும், கட்டுமான திட்டங்களுக்கான நிதியைத் திரட்ட முடியும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
விளக்கம்
இந்தத் தேசிய பணமாக்கல் திட்டம் மூலம் அரசின் சொத்துக்கள் முழுமையாகத் தனியாருக்கு விற்பனை செய்யப்படும் என்ற கருத்து நிலவி வந்த நிலையில் இதற்குச் சரியான விளக்கத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்துள்ளார். கிட்டதட்ட இது ஒரு குத்தகை ஒப்பந்தம் போலவே செயல்பட உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications