ஏர் இந்தியா வித்தாச்சு, அடுத்து அலையன்ஸ் ஏர் விற்க வேண்டும்.. மத்திய அரசு முடிவு..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல ஆண்டுகளாக இந்திய மக்கள் வரிப் பணத்தில் உருவான விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியாவை அதீத கடனில் தவிக்கும் காரணத்தால் பல ஆண்டு முயற்சியில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான டேலெஸ் நிறுவனத்திற்கு 18,000 கோடி ரூபாய் அளவிலான தொகைக்கு விற்பனை செய்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு அலையன்ஸ் ஏர், ஏர் இந்தியா கீழ் இருந்து 4 கிளை நிறுவனங்கள், 14,700 கோடி ரூபாய் மதிப்பிலான ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்பனை செய்யும் பணிகளை விரைவில் துவங்க முடிவு செய்துள்ளது.

ஏர் இந்தியா விற்பனை

ஏர் இந்தியா விற்பனை

மத்திய அரசு ஏர் இந்தியா உடன் ஏர் இந்தியா எஸ்க்பிரஸ் மற்றும் கிவுன்ட் ஹேண்டலிங் கிளையான AISATS நிறுவன ஆகியவற்றை மொத்தமாக 18,000 கோடி தொகைக்குக் கைப்பற்றியுள்ளது. இதில் 2700 கோடி ரூபாய் அரசிடம் இருக்கும் பங்குகளுக்கும், மீதமுள்ள 15,300 கோடி ரூபாய் தொகையை ஏர் இந்தியா கடனை தீர்க்கவும் ஏற்க உள்ளது.

AIAHL மற்றும் 4 கிளை நிறுவனங்கள்

AIAHL மற்றும் 4 கிளை நிறுவனங்கள்

ஏர் இந்தியா பிரிவை முழுமையாக விற்பனை செய்த மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்த 4 கிளை நிறுவனங்கள் மற்றும் பெரும் பகுதி சொத்துகள் மற்றும் கடனை ஏற்ற AIAHL நிறுவனத்தையும் விற்பனை செய்வதற்கான பணிகளைத் துவங்க உள்ளதாக DIPAM பாண்டே அறிவித்துள்ளார்.

AIAHL நிறுவனம்

AIAHL நிறுவனம்

AIAHL நிறுவனத்தின் கீழ் தான் ஏர் இந்தியாவின் மொத்த கடன் அளவான 61,562 கோடி ரூபாயில் 46,262 கோடி ரூபாய் மற்றும் நிலம், பல முக்கியக் கட்டிடங்கள் உள்ளது. இதோடு ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்டு, ஏர்லைன் அலைய்டு சர்வீசஸ் லிமிடெட், ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்விசஸ், ஹோட்டல் கார்பரேஷன் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இன்னமும் அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

ரியல் எஸ்டேட் சொத்துக்கள்

ரியல் எஸ்டேட் சொத்துக்கள்

AIAHL நிறுவனத்தில் இருக்கும் நிலம், பல முக்கியக் கட்டிடங்களின் மதிப்பு மட்டும் 14,718 கோடி ரூபாய். AIAHL நிறுவனத்தின் கீழ் தான் இந்தியாவின் சிறு நகரங்களை இணைக்கும் விமானச் சேவை பிரிவான அலையன்ஸ் ஏர் உள்ளது.

அலையன்ஸ் ஏர்

அலையன்ஸ் ஏர்

அலையன்ஸ் ஏர் 1996ல் ஏர் இந்தியாவின் கிளை நிறுவனமாகத் துவங்கப்பட்டு நாட்டின் சிறு நகரங்களை இணைக்கும் விமானச் சேவையை அறிமுகம் செய்தது. இப்பிரிவில் பெரிய அளவிலான வர்த்தக ஆதிக்கம் செலுத்த முடியாவிட்டாலும் இந்த நிறுவனத்தின் கீழ் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது.

மொத்தமாக வெளியேறும் மத்திய அரசு

மொத்தமாக வெளியேறும் மத்திய அரசு

விமானச் சேவையில் இருந்து மத்திய அரசு மொத்தமாக வெளியேற முடிவு செய்துள்ளதால் தற்போது DIPAM அமைப்பு AIAHL நிறுவனம் மற்றும் அதன் கீழ் இருக்கும் அலையன்ஸ் ஏர் மற்றும் பிற 4 முக்கியமான கிளை நிறுவனங்களை விற்பனை செய்ய உள்ளது. இதன் மூலம் கூடுதலான நிதியை திரட்டி கடனை தீர்க்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

DIPAM அமைப்பு

DIPAM அமைப்பு

DIPAM அமைப்பு அடுத்ததாக விற்பனை செய்யும் ஏர் இந்தியா சொத்துக்களை வாங்க உள்நாட்டு நிறுவனத்தை விடவும் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிகளவிலான போட்டிப் போட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா Vs அதானி Vs அஜய் சிங்

டாடா Vs அதானி Vs அஜய் சிங்

இந்த விற்பனை சுற்றில் விமான நிலையங்களை வாங்கி வரும் கௌதம் அதானி, ஏர் இந்தியாவை வாங்குவதில் தோற்றுப்போன ஸ்பைஸ்ஜெட் அஜய் சிங், ஏர் இந்தியாவை வாங்கிய டாடா ஆகிய மூவரும் போட்டிப்போட வாய்ப்பு அதிகம்.

இதேவேளையில் சமீப காலமாக எவ்விதமான வர்த்தக விரிவாக்கமும் செய்யாத இண்டிகோ ஏர்வையன்ஸ் நிறுவனமும் போட்டிப்போட வாய்ப்பு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+