பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மத்திய அரசுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிறுவனங்களின் பங்குகளைச் சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கும் விற்பனை செய்யவும், நீண்ட கால முறையில் குத்தகைக்கு விட்டு அதிகப்படியான நிதியைத் திரட்டுவதிலும், தனியார்மயமாக்குவதிலும் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி இலக்குகளை வைத்து இயங்கி வரும் வேளையில் தற்போது 4 முக்கிய வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இந்த பங்கு விற்பனைக்குப் பின்பு முக்கியமாகக் காரணம் உள்ளது.
மத்திய அரசு, பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான SEBI நிர்ணயித்த பொது பங்கு பங்களிப்பு விதிமுறைகளைப் பின்பற்றும் பொருட்டு, நான்கு அரசு வங்கிகளில் இருக்கும் தனது பங்கு இருப்பை சரிசெய்யச் சிறிய அளவிலான பங்குகளை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

சென்டரல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி ஆகிய நான்கு வங்கிகளில் மத்திய அரசு தற்போது 90% க்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ளது. SEBI விதிமுறைகளின்படி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் குறைந்தபட்சம் 25% பங்குகள் பொது சந்தை முதலீட்டாளர்களிடம் இருக்க வேண்டும்.
இந்த விதியை பின்பற்றும் பொருட்டு, மத்திய அரசு சென்டரல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி ஆகிய நான்கு வங்கிகளில் தனது பங்குகளை பொது சந்தையில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், மத்திய அரசு அதிக நிதியைப் பெற்று தனது நிதி நிலையை வலுப்படுத்திக் கொள்ள முடியும். மேலும், இந்த நடவடிக்கை மூலம் பொதுத்துறை வங்கிகளில் வெளிப்படைத்தன்மை மேம்படுத்தும் என்பது செபி, நிதியமைச்சகம், ஆர்பிஐ ஆகியவற்றின் மையக் கருத்தாக உள்ளது.
மத்திய அரசு தற்போது சென்டரல் வங்கியில் 93 சதவீத பங்குகளையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 96.4 சதவீத பங்குகளையும், யூகோ வங்கியில் 95.4 சதவீத பங்குகளையும் மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கியில் 98.3 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது. இது செப்டம்பர் மாத முடிவின் நிலவரம்.
இந்த பங்குகளை விற்க மத்திய அரசுக்கு 2026 ஆகஸ்ட் வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்டாலும், இதை 2025 ஆம் ஆண்டிலேயே துவங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.


Click it and Unblock the Notifications