டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஓய்வூதிய பலன்களை வழங்குவதற்கான திட்டத்தை கையில் எடுத்துள்ளது. மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்று இருக்கிறார். இந்த முறை மோடி தலைமையிலான அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அளவிலான ஓய்வூதிய பலன்களை வழங்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பது தெரியவந்துள்ளது.

தற்போது என்பிஎஸ் எனப்படும் தேசிய பென்ஷன் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சந்தை அடிப்படையிலான வருவாய் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் மத்திய அரசு இதில் மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது அரசு ஊழியர்கள் கடைசியாக அவர்கள் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் வரை ஓய்வூதியமாக பெறுவதற்கு இந்த புதிய திட்டம் உத்தரவாதம் அளிக்கும் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிதித்துறை செயலாளர் டி வி சோமநாதன் தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்தது. பல்வேறு மாநில அரசுகளும் என்பிஎஸ் முறையை விடுத்து பழைய ஓய்வூதிய முறைக்கு மாறி வருகின்றன. எ
னவே பழைய ஓய்வூதிய முறைக்கு திரும்ப செல்லாமல் புதிய ஓய்வூதிய முறையிலேயே ஓய்வூதிய பலன்களை மேம்படுத்துவதற்கான வழிகளை இந்த கமிட்டி ஆய்வு செய்யும் என கூறப்பட்டது.
இந்த குழுவிற்கு அறிக்கை வழங்குவதற்கு என எந்த காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இந்த குழுவில் நிதி அமைச்சகத்தின் செலவின துறையின் சிறப்பு செயலாளர் ராஜா சௌகான் , அன்னி மேத்யூ மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய தலைவர் தீபக் மொஹந்தி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் இந்த கமிட்டி கடந்த மே மாதம் மத்திய அரசிடம் தங்களது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் 2023 ஆம் ஆண்டு ஆந்திராவில் அறிமுகம் செய்யப்பட்ட ஓய்வூதிய திட்டத்துடன் ஒத்துப் போகக்கூடிய ஒரு திட்டத்தை இந்த குழு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆந்திர பிரதேச உத்தரவாத ஓய்வூதிய அமைப்பு திட்டம் 2023 இன் படி கடைசியாக பெறப்பட்ட அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தை மாதாந்திர ஓய்வூதியமாக பெறுவது உறுதி செய்யப்படுகிறது. மேலும் அந்த ஊழியர் உயிரிழக்கும் பட்சத்தில் அவரது வாழ்க்கை துணைக்கு இந்த உத்திரவாத தொகையின் 60% மாதாந்திர ஓய்வூதிய ஓய்வூதியமாக வழங்கப்படும்.
பண வீக்கம் மற்றும் வாழ்வதற்கு தேவையான நிதி ஆகியவை கடைசியாக பெற்ற ஊதியத்தில் கணக்கீடு செய்யப்படும். இதுதான் ஆந்திராவில் நடைமுறையில் இருக்கக்கூடிய சட்டம்.
தற்போது இந்த கமிட்டி முன்மொழிந்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் கடைசியாக பெறப்பட்ட ஊதியத்தில் 40 முதல் 50 சதவீதம் வரை ஓய்வூதிய உத்தரவாத தொகையாக கிடைக்கும். அந்த ஊழியர் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையிலும், ஓய்வூதிய தொகையிலிருந்து ஏதேனும் பணம் எடுக்கப்பட்டு இருந்தால் அதன் அடிப்படையிலும் இறுதித் தொகையானது தீர்மானிக்கப்படுகிறது.
உத்தரவாத ஓய்வூதிய தொகையை பூர்த்தி செய்ய தேவையான ஓய்வூதிய தொகை குறைவாக இருக்கும் பட்சத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டில் அது ஈடு செய்யப்படும்.
இந்த புதிய நடைமுறை செயல்படுத்தப்படும் பட்சத்தில் 2004 ஆம் ஆண்டு முதல் என்பிஎஸ்-இல் பதிவு செய்யப்பட்டிருக்கும் சுமார் 8.7 மில்லியன் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பலனடைவார்கள்.
ஓபிஎஸ் எனப்படும் பழைய பென்ஷன் திட்டம் அதாவது 2004 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை செயல்பாட்டில் இருந்து இந்த திட்டத்தின் அடிப்படையில் மத்திய மாநில அரசு ஊழியர்கள் அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறுவார்கள்.இதற்கு அவர்கள் தொடர்ந்து இருபது ஆண்டுகள் அரசு பணியில் இருந்திருக்க வேண்டும்.
அதுவே தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய என்பிஎஸ் எனப்படும் தேசிய பென்ஷன் திட்டத்தில் ஊழியர்கள் குறைந்தபட்சம் 40 சதவீத ஒட்டுமொத்த பங்களிப்புகளை வருடாந்திர ஓய்வூதியத்தில் முதலீடு செய்து மாத ஓய்வூதியம் பெற வேண்டும். ஆனால் இதில் உத்தரவாதம் இல்லை மற்றும் இது வருடாந்திர வருமானத்திற்கு உட்பட்டது. மீதமுள்ள 60% வரிவிலக்குடன் எடுத்துக் கொள்ளலாம்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications