பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான விண்ட்ஃபால் வரியைக் குறைத்துள்ளது.
விண்ட்ஃபால் டாக்ஸ் (windfall tax) என்பது ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது தொழில்துறைக்கு திடீரென அதிகப்படியான லாபம் கிடைக்கும் போது, இதில் இருந்து அரசு கூடுதலான வரி வருமானத்தைப் பெற விதிக்கப்படும் வரி தான்
விண்ட்ஃபால் டாக்ஸ்.
இதன் அடிப்படையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதும் மத்திய அரசு பெட்ரோலியம் பொருட்கள் மீது அதிகப்படியான வரியை விதித்தது. தற்போது கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப வரி குறைக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி க்ரூட் பெட்ரோலியம் மீதான விண்ட்ஃபால் டாக்ஸ் ஒரு டன்னுக்கு 5050 ரூபாயில் இருந்து 4350 ரூபாயாகக் குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் விமான எரிபொருள் மீது இருந்த சிறப்புக் கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயில் இருந்து 1.50 ரூபாயாக குறைந்துள்ளது. மேலும் டீசல் மீது இருந்து சிறப்புக் கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு 7.50 ரூபாயில் இருந்து 2.50 ரூபாயாகக் குறைந்துள்ளது.
விண்ட்ஃபால் டாக்ஸ்
பிப்ரவரி 4 ஆம் தேதி மத்திய அரசு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான விண்ட்ஃபால் வரியை அதிகரித்த நிலையில், தற்போது குறைத்துள்ளது.
யாருக்கு லாபம்..?
இந்த வரிக் குறைப்பு மூலம் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் ஏற்றுமதியில் இருக்கும் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பலன் பெறும். குறைவான விலையில் அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியும், இதேபோல் தற்போதைய விலையிலேயே ஏற்றுமதி செய்து அதிக லாபத்தைப் பெற முடியும்.
விண்ட்ஃபால் வரி அறிமுகம்
இந்தியாவில் முதல் முறையாக விண்ட்ஃபால் வரியை 2022 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் கொண்டுவரப்பட்டது. பல நாடுகள் இதை நடைமுறையில் வைத்திருந்தாலும், முதல் முறையாக இந்திய எரிபொருளுக்குச் சர்வதேச சந்தையில் டிமாண்ட் அதிகமாகியிருக்கும் வேளையில் விண்ட்ஃபால் வரி கொண்டுவரப்பட்டது.
ஏற்றுமதி
ஆரம்பத்தில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் மற்றும் விமான எரிபொருளுக்கு லிட்டருக்கு 6 ரூபாயும், டீசலுக்கு 13 ரூபாயும் விதிக்கப்பட்டது. இதன் பின்பு பல முறை உயர்த்தியும் குறைக்கப்பட உள்ளது.
ஒரு பேரல் 139 டாலர்
2022 ஆம் ஆண்டு மார்ச் காலாண்டில் ONGC போன்ற கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன. இதற்கு முக்கியக் காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு பேரலுக்கு 139 டாலராக உயர்ந்தது தான். இதில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள்-ம் அடக்கம்.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு இந்தியாவிற்கு ரஷ்யா மிகப்பெரிய அளவிலான தள்ளுபடியில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்தக் கேப்-ஐ பயன்படுத்தி இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் கச்சா எண்ணெய்-ஐ எரிபொருளாக மாற்றி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளது.
இந்தியா - அமெரிக்கா
இந்த நிலையில் இந்தியா டிசம்பர் மாதம் மட்டுமே அமெரிக்காவிற்கு ஒரு நாளுக்கு 89000 பேரல் அளவிலான கேசோலின் மற்றும் டீசல்-ஐ ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த 4 வருடத்தில் அதிகமான அளவாகும்.
இந்தியா - ஐரோப்பா
இதேபோல் ஜனவரி மாதம் மட்டும் ஐரோப்பாவிற்கு ஒரு நாளுக்கு 172000 பேரல் அளவிலான லோ சல்பர் டீசலை ஏற்றுமதி செய்துள்ளது இந்தியா. இது அக்டோபர் 2021ல் இருந்து அதிகப்படியான அளவாகும்.
ரஷ்யா இறக்குமதி
இதைத் தொடர்ந்து ரஷ்யா வருகிற மார்ச் மாதத்தில் இருந்து தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளுக்கு 500000 பேரல் அளவுக்கு குறைக்க முடிவு செய்துள்ளது.கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து உலக நாடுகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது ரஷ்யா அரசு.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications