மத்திய அரசு, இந்தியாவில் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் மீது விதிக்கும் Windfall வரியை முழுமையாக ரத்து செய்துள்ளது. மார்ச் மாத இறுதியில் ஒரு டன் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீது 4400 ரூபாய் வரி விதிக்கப்பட்ட விண்ட்ஃபால் டாக்ஸ் 3500 ரூபாயாக குறைக்கப்பட்டது. தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட உள்ளது.
இதேவேளையில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீசல் விலை அதிகரித்து வரும் வேளையில், டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 1 ரூபாயில் இருந்து 50 பைசாவாக குறைக்கப்பட்டு உள்ளது.
பெட்ரோல், விமான எரிபொருள் மீது தொடர்ந்து ஜீரோ வரி தொடர்கிறது. சரி விண்ட்ஃபால் டாக்ஸ் என்பது என்ன..?
மோடி அரசு
பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான விண்ட்ஃபால் வரியை விதிக்கும். இது பொதுவாக விதிக்கப்படும் வரிகளை தாண்டி கூடுதலாக விதிக்கப்படும் விரியாகும்.
விண்ட்ஃபால் டாக்ஸ்
விண்ட்ஃபால் டாக்ஸ் (windfall tax) என்பது ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது தொழில்துறைக்குத் திடீரென அதிகப்படியான லாபம் கிடைக்கும் போது, இதில் இருந்து அரசு கூடுதலான வரி வருமானத்தைப் பெற விதிக்கப்படும் வரி தான்
விண்ட்ஃபால் டாக்ஸ். இது 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது.
வரி விதிப்பு
இதன் அடிப்படையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதும் குறையும் போதும் மத்திய அரசு இதற்கு ஏற்ப இந்தியாவில் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்படும் எரிபொருள் மீது வரியை விதித்தது லாபம் பார்த்தது. இந்த நிலையில் தற்போது கச்சா எண்ணெய்க்கு ஜீரோ விண்ட்ஃபால் டாக்ஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடிப்படை காரணம்
விண்ட்ஃபால் டாக்ஸ் விதிக்க அடிப்படை காரணம் தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இந்தியாவில் சுத்திகரிக்கப்படும் எரிபொருளை உள்நாட்டிலேயே விற்பனை செய்ய ஊக்கப்படுத்தவும், ஏற்றுமதி செய்வதை குறைக்கவும் கொண்டு வரப்பட்டது இந்த விண்ட்ஃபால் டாக்ஸ்.
கச்சா எண்ணெய் விலை
கடந்த மாதம் சர்வதேச சந்தையில் பொருளாதார மந்த நிலை காரணமாக பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 70 டாலர் கீழ் சரிந்தது. இது OPEC நாடுகளின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு அறிவிப்புக்கு பின்பு 85 டாலர் விலையை தாண்டியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் டாக்ஸ்-ஐ ரத்து செய்துள்ளது.


Click it and Unblock the Notifications