மோடி - நிர்மலா சீதாராமன்: பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரிய மாற்றம்..!!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிர்வாகம், இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் மற்றும் சொத்துக்களை விற்பனை செய்வது வாயிலாகவும், நீண்ட கால குத்தகைக்கு விடுவதன் வாயிலாகவும் நிதி திரட்டும் இலக்குகளை நிர்ணயம் செய்துள்ளது.

இதேவேளையில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியின் விதிகளுக்கு இணங்க பொதுத்துறை வங்கிகளில் குறைந்தபட்ச பொது சந்தை பங்கீடு விதிமுறையைப் பூர்த்தி செய்யவும், மத்திய அரசு 4 வங்கிகளில் பெரும் பகுதி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.

மோடி - நிர்மலா சீதாராமன்: பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரிய மாற்றம்..!!

சமீபத்தில் மத்திய அரசு IDBI வங்கியின் 60 சதவீத பங்குகளை விற்பனை செய்து வெற்றி கண்டதன் வாயிலாக இதே ஃபார்முலாவை பயன்படுத்த பொதுத்துறை வங்கி பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

செபியின் குறைந்தபட்ச 25 சதவீத பங்குகள் பொது சந்தையில் இருக்க வேண்டும் என விதிக்கு இணங்க சென்டரல் பேங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் மத்திய அரசின் பங்கீட்டை 75 சதவீதம் வரையில் குறைக்க முடிவு செய்துள்ளது.

Also Read

மேலும் மத்திய 2026-27 ஆம் நிதியாண்டுக்காக disinvestment target அளவை 80000 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுத்துறை வங்கி பங்குகளை விற்பனை செய்வது மூலம் டிஸ்இன்வெஸ்ட்மென்ட் டார்கெட்டை எளிதாக எட்டிவிட முடியும்.

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டத்தில் மத்திய அரசு மீண்டும் ஒரு வங்கி இணைப்பு திட்டத்தை கையில் எடுக்க உள்ளதாகவும், இதன் மூலம் 2 வங்கிகள் தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மோடி தலைமையிலான அரசு 2021-22 பட்ஜெட் கூட்டத்தில் ஐடிபிஐ வங்கியை தவிர்த்து 2 பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்குவதாக அறிவித்து இருந்தது. இதில் ஐடிபிஐ வங்கி பணிகள் மட்டுமே தற்போது முடிந்துள்ளது, மற்ற 3 நிறுவனத்தைத் தனியார் மயமாக்கும் பணிகள் இன்னும் முடியவில்லை.

மத்திய அரசின் கீழ் செயல்படும் நித்தி அயோக் அமைப்பு சென்டர்ல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றை தனியார்மயமாக்கலாம் என ஏற்கனவே தனது பரிந்துரையை முன்வைத்துள்ளது.

இத்திட்டங்களையும், இலக்குகளையும் அடைய மத்திய அரசு அடுத்த ஒரு வருடத்தில் 4 பொதுத்துறை வங்கிகளிலும் தனது பங்கு இருப்பை 75 சதவீதமாகக் குறைத்துள்ளது. மேலும் எப்போது பங்குச்சந்தையில் பங்குகளை விற்கலாம் என்பதை வங்கி நிர்வாகம் முடிவு செய்யும் அதிகாரத்தையும் மத்திய அரசு கொடுத்துள்ளது. இதனால் விரைவில் இந்தியப் பொதுத்துறை வங்கி பிரிவில் ஒரு இணைப்பு மற்றும் தனியார்மயமாக்கும் நடவடிக்கை நடக்க உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+